50
வாழும் வழி
அதிகாரத்தின் வேறுபாட்டோடு, குறள்களின் வரிசை அமைப்பிலும் பெரிய வேறுபாடு காணக்கிடக்கின்றது. மணக்குடவர், பருதி, காளிங்கர், பரிமேலழகர் முதலியோர் உரைகளை எடுத்துப் பாருங்கள். ஒவ்வோர் அதிகாரத்திலும் குறள்களை எப்படி முன் பின்னாக ஒவ்வொருவரும் மாற்றி அமைத்திருக்கின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
அப்படியென்றால், திருவள்ளுவர் அமைத்த முறைதான் எது? ஏன் இத்தகைய மாறுதல்கள் ஏற்பட்டன? எப்படி ஏற்பட்டன? எவரால் ஏற்பட்டன? எப்போது ஏற்பட்டன? இதற்கு முடிவுகட்டித் தக்க விடையிறுப்பவர் எவர்? இஃது ஆராய்ச்சிக்குரியது.
“கற்ற வேண்டியவற்றைப் பழுதறக் கற்க வேண்டும். அதன்படியே நடக்கவும் வேண்டும்” என்னும் கருத்துடைய
‘கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக.’
என்னும் குறளினை ஈண்டு ஆராய்வோம்.
(பதவுரை) கற்பவை = கற்கக்கூடியவற்றை, கசடு அறக் கற்க = குற்றமறக் கற்க வேண்டும். கற்றபின் = கற்றதும், அதற்குத் தக நிற்க = கற்றதற்கு ஏற்றபடி