பக்கம்:வாழும் வழி.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

வாழும் வழி


நாமே வாழ்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ளக்கூடாதா? செய்யலாம்; ஆனால் காலமும் முயற்சியும் மிகவும் வீணாகும். வாழ்க்கையின் பூட்டுத் திறப்புகளைத் தெரிந்துகொள்வதிலேயே காலங் கழிந்துவிடும். ஆக்க வேலைகளுக்குக் காலம் போதாது. முட்டின்றி வாழ்க்கை வாழ முடியாது. ஆகையால்தான் முன்னோர் நூற்களைக் கற்க வேண்டும்.

ஒருவனுக்கு இப்போது வயது முப்பது. அவன் மூவாயிரம் ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்துள்ள நூற்களையெல்லாம் படித்திருக்கிறான் என்றால், அவனுக்கு இப்போது வயது வெறும் முப்பது அன்று; மூவாயிரத்து முப்பது (3000+30=3030) ஆகும். அந்த நூற்களைப் படிக்காத எண்பது வயதுக் கிழவன் ஒருவன் இவனுக்கும் சின்னவனேயாவான். மூவாயிரத்து முப்பதுக்கும் வெற்று எண்பதுக்கும் எவ்வளவோ இடைவெளி இருக்கிறதல்லவா? இதனால்தான்,

‘ஒருகுடிப் பிறந்த பல்லோருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்’

எனப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் புறநானூற்றுப் பாடல் (183) ஒன்றில் கூறியிருக்கிறான் போலும்!

எனவே, கற்றல் என்பது, எதிர்கால நல் வாழ்வுக்காக முன்கூட்டியே பெறும் பெரியதொரு பயிற்சியே என்பது விளங்கும். “பெற்றுள்ள சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னைப் பொருத்தி வாழக் கற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/54&oldid=1105677" இருந்து மீள்விக்கப்பட்டது