புலவர் சுந்தர சண்முகனார்
57
இந்த விந்தையை உலகினர் கேள்விப்படின், முற்கூறிய அறிஞர்களைக் கண்டு பேசத் துடிப்பர்; என்ன செய்தால் வித்தாமலேயே நிலம் தானாகவே விளையும் என்பதைத் தாமும் தெரிந்துகொள்ள அவாக் கொள்வர்; மேலும் அத்துறையில் ஆராய்ச்சி நடத்த ஆர்வம் காட்டுவர். ஆம், அந்த வழியையும் நம்மவர்கள் சொல்லியிருக்கின்றனர். அஃது என்ன?
‘தன் இல்லத்திற்கு வரும் விருந்தினர்களுக்கு இருக்கும் உணவை அளித்து, மிச்சம் இருப்பின் தான் உண்ணுபவன் எவனோ, அவனுடைய நிலத்தில் விதையே போட வேண்டியதில்லை; அது தானாகவே “தாம் தாம் என்று விளைந்துவிடும்.”
இதுதான் நம் அறிஞர்களின் கண்டுபிடிப்பு. இது உலக விஞ்ஞானிகளுக்கு ஓர் அறைகூவல் அல்லவா? உலகத்தினர் இதனை நம்பவில்லையென்றால் அது அவர்களுடைய தவறு என்றுதான் நம் மேதைகள் பகர்வர்.
இந்தக் கருத்து சிறிதும் அறிவிற்குப் பொருந்தாத ஒரு மயக்கமாகும். ஒருவன் தன் உணவை வருபவர்க்கு அளித்துவிட்டு, தான் ஈரத்துணியை வயிற்றில் போட்டுக் கொள்வானானால், அவனுக்குப் பெரிய புண்ணியம் உண்டாகும். அப் புண்ணியங் காரணமாக, அவன் நிலம் தானாக விளையும்படிக் கடவுள் அருள்புரிவார் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் நம்மவர் சிலர் இப்படி எழுதி வைத்துள்ளனர். இந்தக் கருத்தை இன்றைய உலகம் - பகுத்தறிவு நிறைந்த உலகம் -