பக்கம்:வாழும் வழி.pdf/61

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

59


முதலில் உணவளித்து, பின்பு மிகுந்திருப்பதைத் தான் உண்ணுபவனுடைய நிலத்தில் விதையும் இட வேண்டுமோ? வேண்டா; அது தானாகவே விளையும்” என்னும் கருத்திலேயே எல்லோரும் உரை எழுதியிருக்கின்றனர். அறிஞர்களின் ஆராய்ச்சிப் பார்வைக்காக இங்கே பழைய தமிழ் உரைகள் மூன்றும், ஆங்கில மொழிபெயர்ப்பு மூன்றும் கீழே தரப்படும்:

1) “முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத்தான் மிசைவானது விளைபுலத்திற்கு வித்திடுதலும் வேண்டுமோ? வேண்டா; தானே விளையும்.”

- பரிமேலழகர்

2) “விருந்தினரை யூட்டி மிக்க வுணவை உண்ணுமவன் புலத்தின்கண் விளைதற் பொருட்டு விதைக்கவும் வேண்டுமோ? வேண்டா; தானே விளையாதோ?

-மணக்குடவர்

3) விருந்து உபசரித்து மிஞ்சினதைப் புசிப்பது, கழனிக்கு எருப்போட்டு நீர்த் தேக்கினதுபோல ஒன்று நூறாயிரம் விளையும்.

-பாரதியார்

4) “Does the field of one who partakes what remains after entertaining the guest, need to be sown with seeds?” - by V.R.Ramachandra Deetchathar

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/61&oldid=1106417" இருந்து மீள்விக்கப்பட்டது