பக்கம்:வாழும் வழி.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

வாழும் வழி


5) “Behold the man who feedeth his guest first and then only eateth what is left; doth his land stand in need even of sowing?” - By V.V.S. Aiyar.

6) “What need is there that he should sow his field, who welcomes guests and eats but what remains?” - by H.A.Popley.

விரிவஞ்சி இங்கே அறுவர் உரைகள் மட்டும் தரப்பட்டுள்ளன. இப்படியே பற்பலர் எழுதியுள்ளனர். வள்ளுவர் இந்தக் கருத்திலா இந்தக் குறளை எழுதியிருப்பார்? அறிவுக்கொவ்வாத குப்பைகளை நம்பிவந்த மக்களிடையே தோன்றி வாழ்ந்து வந்தவர்தான் வள்ளுவர் என்றாலும் கருத்துக்களை வெளியிடும் முறையில் அவர் ஒரு பெரும் புரட்சிக்காரர் என்பதைக் கூர்த்த மதியினர் உணர்வர். அந்தக் காலத்துக்கு அவர் போக்கு ஒரு பெரும் புரட்சியே!

இனி, இந்தக் குறளின் உண்மைக் கருத்து யாதாக இருக்கக்கூடும் என்று ஆராயலாம்:-

உணவு அருந்தும் வேளை. ஒருவர் திடீரென்று ஏதோ ஒரு வேலையாக வீட்டிற்கு வந்துவிடுகிறார். உண்ணுவதற்குச்செல்ல இருந்த வீட்டுக்காரர் வந்தவரையும் உடன் உண்ண அழைக்கிறார். ‘திடீரென்று வந்தவிடத்தில் உணவருந்த ஒத்துக் கொள்ளலாமா? நமக்காக முன்கூட்டியே உணவு தயாரித்தா வைத்திருக்க முடியும்?’ என்றெண்ணி வந்தவர் மறுக்கிறார். வீட்டுக்காரர் வற்புறுத்துகிறார்: “உங்களுக்காகவா உலை வைத்துச் சோறு சமைக்கப் போகிறோம்? ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/62&oldid=1106485" இருந்து மீள்விக்கப்பட்டது