பக்கம்:வாழும் வழி.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

61


இருப்பதை எங்களுடன் உண்ணுங்கள்” என்று சொல்லி அழைக்கிறார். இந்நிகழ்ச்சியினை உலகியலில் காணலாம். இன்னும் சிலர், வந்தவரை நோக்கி, ‘உங்களுக்காகவா கூடை எடுத்துக்கொண்டு கடைக்குப் போய் அரிசி வாங்கி வந்து சமைக்கப்போகிறோம்? ஏதோ இருக்கிறது; எடுத்துப் போட்டுச் சமைத்திருக்கிறோம்; அதனை எங்களுடன் நீங்களும் உண்ணுங்கள்’ என்று கூறி அழைப்பர். இஃதும் உலகியலில் காணத்தக்கதொரு நிகழ்ச்சியே.

இப்பொழுது இங்கே இக்குறள்பற்றி இரண்டு படிகள் எடுத்துப் பேசப்பட்டன. நாம் மூன்றாவது படிக்குத் தாண்டுவோமே! அஃது என்ன? ‘இருப்பதை வந்தவர்க்கு அளித்து, மிஞ்சியிருந்தால் தான் உண்ணும் உயர்ந்த உள்ளம் படைத்தவன், விருந்திருனருக்கு என்று கூடுதலாக நிலத்தில் விதைக்க வேண்டுமா? கூடுதலாகப் பயிர் செய்ய வேண்டுமா? கூடுதலாகச் சமைக்க வேண்டுமா? வேண்டா!’ என்பது வள்ளுவர் குறளின் கருத்தாயிருக்கக் கூடாதா? ‘தனக்கு மிஞ்சியே தருமம்’ என்ற உளநிலை படைத்தவன்தான், தனக்குப் போதா விட்டால் என்ன செய்வது என்றஞ்சிப் பிறருக்கென்று தனியாகத் தயார் செய்யவேண்டும். ஆனால், தனக்கு மிஞ்சியே தருமம் என்றில்லாமல், பிறர்க்கு மிஞ்சியே தனக்கு என்ற உயர்ந்த உளநிலை பெற்றவன், தனக் கென்றும் பிறர்க்கென்றும் தயாரிக்க வேண்டியதில்லை; தன்னுடையதையே பிறர்க்குத் தந்துவிடுவான் அன்றோ?

உங்களுக்காகவா உலை வைத்துச் சமைக்கப் போகிறோம்? இது முதல் படி. உங்களுக்காகவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/63&oldid=1107012" இருந்து மீள்விக்கப்பட்டது