புலவர் சுந்தர சண்முகனார்
67
என்னும் தலைப்பாகும். இந்தப் பகுதிக்கு ஏன் இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது? ‘போற்றி, போற்றி’ என்று அடிக்கடி வந்துள்ள பகுதிக்குப் ‘போற்றித் திருவகவல்’ என்ற பெயரும், ‘எம்பாவாய், எம்பாவாய்’ என்று அடிக்கடி வந்துள்ள பகுதிக்குத் ‘திருவெம்பாவை’ என்ற பெயரும், இதுபோலவே அமைந்திருக்கும் மற்ற பகுதிகளுக்கும் மற்ற பெயர்களும் கொடுக்கப் பட்டிருப்பது ஒருவகையில் முறையே. ஆனால் முதல் பகுதிக்குச் ‘சிவபுராணம்’ என்னும் பெயர் கொடுக்கப்பட்டது ஏன்? இந்தப் பகுதியில் -
“சிந்தை மகிழச் சிவபுராணந் தன்னை
முந்தை வினைமுழுது மோய உரைப்பது யான்”
என்னும் அடிகள் காணப்படுவதனாலேயே, இதற்குச் சிவபுராணம் என்னும் பெயர் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பெயர்சூட்டு வேலை ஆசிரியருடைய தன்று; பிற்காலத்தவரின் கைச்சரக்கேயாம்.
இந்தப் பகுதிக்கு ஆசிரியர் எந்தப் பெயரும் சூட்டவில்லை. இது ‘பாயிரம்’ என்படும் பகுதியாகும். அதாவது, நூலுக்கு முன்னால் எழுதப்படும் ஆசிரியரின் முன்னுரையாகும் என்பதே என் கருத்து. இதற்குப் பல சான்றுகள் பகர்வேன்.
அன்றுதொட்டு இன்று வரை, இறைவன்மேல் செய்யுள் நூல் எழுதுபவர்கள், முதலில் கடவுள் வணக்கம் எழுதி, அடுத்து, தாம் எழுதப் போகும் நூல் இன்னது - அதனை எழுதுவதற்குத் தமக்கு எந்தத் தகுதியும் இல்லையாயினும் ஆவல்பற்றி எழுதுவதாக