பக்கம்:வாழும் வழி.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

73மறுப்புக்கு மறுப்பு:- மணிவாசகர் தாம் பயணம் செய்த ஒவ்வோர் ஊரிலும் ஒவ்வொரு பதிகம் எழுதியதாக ஒவ்வொரு பகுதியின் முன்பும் ஊர்ப் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதை அப்படியே ஏற்றுக் கொள்வதற்கில்லை. அவ்வூர்ப் பெயர்கள் மணிவாசகரால் குறிப்பிடப் பட்டவையல்ல. அவ்வேலை பிற்காலத்தவரின் கைவண்ணமே. இந்த இந்தப் பகுதி இந்த இந்த ஊரில் பாடப்பட்டது என்பதிலும் அறிஞர்களிடையே கருத்து வேற்றுமை உள்ளது. காட்டாகத் திருவெம்பாவையை எடுத்துக்கொள்வோம். இது அருளிச் செய்யப்பட்ட இடம் திருவண்ணாமலை என்று கடவுள் மாமுனிவர் தம் திருவாதவூரர் புராணத்திலும், திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை தம் திருப்பெருந்துறைப் புராணத்திலும் கூறியுள்ளனர். ஆனால் கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரோ தில்லையில் அருளிச் செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார். பெரும்பற்றப் புலியூர் நம்பி என்பவரோ, திருவெம்பாவை திருப்பெருந்துறையில் அருளிச் செய்யப்பட்டதாகத் தம் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் தெரிவித்துள்ளார். அப்படியே மணிவாசகர் வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு ஊரில் எழுதியாதாக இருப்பினும், இறுதியில் ஒருமுறை எல்லாப் பகுதிகளையும் தாமே தொகுத்தார் என வரலாறு கூறுகிறது. அதாவது தில்லையில் இறைவனே மனித உருவில் வந்தி, திருவாசகம் முழுவதையும் மணிவாசகரைச் சொல்லச் செய்து, தம் கையாலே எழுதியதாகச் சொல்லப்படுகிறது. (இறைவன் எழுதிய இந்த ஓலைச்சுவடி தங்கள் மடத்தில் இப்பொழுதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/75&oldid=1107081" இருந்து மீள்விக்கப்பட்டது