பக்கம்:வாழும் வழி.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

வாழும் வழி


இருப்பதாக, புதுச்சேரி அம்பலத்தாடையர் மடத்தினர் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.) இறைவன் எழுதினாரோ அல்லது ஒரு சிறந்த சிவனடியார்தான் எழுதினாரோ எப்படியோ ஒருமுறை மாணிக்கவாசகரின் நேர்ப்பார்வையில் ஒரே நேரத்தில் ஒருசேரத் திருவாசகம் முழுமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற முடிவுக்குத் துணிந்து வரலாம்.

எனவே, ஒரே நேரத்தில் நூலைத் தொகுத்து முழுமைப்படுத்திக் கண்ட மணிவாசகர், பாயிரம் எனப்படும் முன்னுரையை நூலுக்குமுன் அமைத்திருப்பதில் புதுமையோ - வியப்போ இல்லையே. மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து, ஆண்டுக்கொரு பாடலாக மூவாயிரம் பாடல்கள் எழுதியதாகக் கதை பேசப்படும் திருமூலரின் திருமந்திரத்திற்கே பாயிரம் உள்ளதே! அங்ஙணமிருக்க, திருவாசகத்திற்கும் ஏன் பாயிரம் இருந்திருக்க முடியாது?

மறுப்பு-3:- திருவாசகத்தில் உள்ள ஐம்பத்தொரு தலைப்புகளின் கீழும் தலைப்பு விளக்கம் எழுதப்பட்டுள்ளது. காட்டாக இரண்டு மூன்று பார்ப்போம்:‘சிவபுராணம்’ என்னும் முதல் தலைப்பின் கீழ, சிவனது அநாதி முறைமையான பழமை என்ற விளக்கம் உள்ளது. ‘கீர்த்தித் திருவகல்’ என்னும் அடுத்த தலைப்பின் கீழ், சிவனது திருவருட் புகழ்ச்சி முறைமை’ என்ற விளக்கம் இருக்கிறது. ‘திருவண்டப் பகுதி’ என்னும் அடுத்த தலைப்பின்கீழ், ‘சிவனது தூல சூக்குமத்தை வியந்து’ என்னும் விளக்கம் காணப்படுகிறது. இப்படியே ஒவ்வொரு தலைப்புக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/76&oldid=1107082" இருந்து மீள்விக்கப்பட்டது