பக்கம்:வாழும் வழி.pdf/77

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

75


ஒவ்வொரு விளக்கம் உள்ளதால், முதலில் காணப்படும் ‘சிவபுராணம்’ என்னும் தலைப்பு முதல் பகுதிக்கு மட்டுமே உரியதாகும்; அது நூல் முழுவதற்கும் பெயராக இருக்க முடியாது.

மறுப்புக்கு மறுப்பு:- சிவபுராணம் என்னும் தலைப்பின்கீழ், ‘சிவனது அநாதி முறைமையான பழமை’ என்று எழுதப்பட்டிருப்பது மாணிக்கவாசகரின் கைச்சரக்கு அன்று. அப்படியொன்றும் அந்த முதற்பகுதியில் சிவனது அநாதி முறைமையான பழமை பேசப்படவில்லையே. முதற் பகுதியினும் பின்னுள்ள சில பிற பகுதிகளில்தான் சிவனது அநாதி முறைமையான பழமை பேசப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு தலைப்பின்கீழும் உள்ள விளக்கம், பிற்காலத்தவரால் எழுதிச் சேர்க்கப்பட்டதாகவே இருக்கவேண்டும். திருக்குறளில் உள்ள ஒவ்வொரு தலைப்புக்கும் திருவள்ளுவர் விளக்கம் எழுதவில்லையே. இப்போதுள்ள விளக்கங்கள் யாவும் பரிமேலழகர் முதலிய உரையாசிரியர்கள் எழுதிச் சேர்த்தவையன்றோ? திருவாசகத் தலைப்பு விளக்கங்களும் அன்னவே. இன்னும் கேட்டால், சிவபுராணம் என்னும் முதல் தலைப்புக்கு, சில ஓலைச் சுவடிகளில் விளக்கமே இல்லை. இதற்குப் பொருள் என்ன? சிவபுராணம் என்பது, மற்ற உள் தலைப்புகளைப் போன்றதன்று; நூல் முழுமைக்கும் உரிய பொதுப் பெயராகும் - என்பதே இதற்குப் பொருள் அன்றோ?

மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் என்னும் இரண்டின் பழைய ஓலைச்சுவடிகள் எங்கள் வீட்டில் உள்ளன. அவை எங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/77&oldid=1107217" இருந்து மீள்விக்கப்பட்டது