உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.





3. மொழியியல்


11. இலக்கணம் இன்றியமையாததா?

பெரும்பாலோர் தமிழைப் பிழையாகவே எழுதுகின்றனர். கடிதம், விளம்பரத்தாள், பெயர்ப் பலகை, சில வெளியீடுகள் முதலியவற்றில் பிழைகள் மலிந்திருக்கலாம். இதற்குக் காரணம் இலக்கண அறிவு இன்மையேயாகும். ‘இலக்கணவிதி தெரியாமற் போனாலென்ன? பிழையாக எழுதினால்தான் என்ன? ஏறக்குறைய கருத்தைத் தெரிவித்தால் போதாதா?’ என்ற வினாக்கள் எழுப்பப்படலாம்.

உலகில் எந்த மொழியினையும் பிழைபடப் பேசுவதாலும் எழுதுவதாலும் உண்டாகும் கேடு (நஷ்டம்) சொல்லுந்தரத்தன்று. எடுத்துக்காட்டாக நம் தென்னிந்திய மொழிகளையே எடுத்துக்கொள்வோம்:

சிலவாயிரம் ஆண்டுகட்கு முன்தென்னிந்தியாவில் ஏதோ ஒரு மொழியே பேசப்பட்டு வந்தது. ஒரே மொழியைப் பேசிய மக்களே, ஒரு மூலைக்கு ஒரு மூலை அம்மொழியினைப் பலவிதமாக இழுத்தும் விழுங்கியும், நீட்டியும் குறுக்கியும், சேர்த்தும் குறைத்தும், மாற்றியும் திருத்தியும் பேசி வந்தனர். இதனால், ஒரே மொழி பலவகை மாறுபாடு அடைய இடமுண்டல்லவா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/80&oldid=1107332" இலிருந்து மீள்விக்கப்பட்டது