பக்கம்:வாழும் வழி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

79



அது மட்டுமன்று; ஆங்காங்கு வந்து குடியேறிக் கூடி வாழ்ந்த பிற மொழியாளர்களின் வீதத்திற்கு ஏற்ப, கூடுதல் குறைச்சலாக, மூலைக்கு மூலை பிற மொழிக் கலப்பு ஏற்பட்டதாலும், ஒரே மொழி பல மாறுபாடு அடைய நேரிட்டது.

அது மட்டுமன்று; ஆங்காங்கே படையெடுத்து வந்து வென்று அடக்கியாண்ட பிறமொழி யரசர்களின் வீதத்திற்கு ஏற்பவும், அவர்தம் ஆட்சியாண்டுகளின் அளவிற்கு ஏற்பவும் கூடுதல் குறைச்சலாக, ஒரு மூலைக்கு ஒரு மூலை, பிறமொழிக் கலப்பு ஏற்பட்டதாலும், ஒரே மொழி பல்வேறு மாறுபாடு அடைய நேர்ந்தது.

இங்ஙனம் நாளடைவில், ஒரு மொழியினர்க்குள்ளேயே, இம்மூலையில் வாழ்ந்தவர் பேசியது ஒருவிதமாகவும், அம்மூலையில் வாழ்ந்தவர் பேசியது மற்றொருவிதமாகவும் இருந்ததால், இது ஒரு மொழி போலவும், அது வேறொரு மொழி போலவும் தோன்ற இடமுண்டாயிற்று.

இந்நிலையில், சூழ்நிலையின் காரணமாக, அவ்வொரு மொழி மக்களுக்குள்ளேயே மேலும் பல பிரிவினைகள் ஏற்பட்டு விட, அவ்வவர் பேசிய பேச்சுக்கள், வெவ்வேறு பெயர்களுடன், வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்துவிட்டன.

இவ்விதம் பிரிந்தவைகளே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்னும் நான்கு மொழிகளுமாகும். இவற்றுள் ஒவ்வொன்றும் வடமொழி (சமஸ்கிருதம்) கலப்பின் வீதத்தால் மாறுபடும். இந்நான்கனுள், மிகக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/81&oldid=1107333" இலிருந்து மீள்விக்கப்பட்டது