இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
80
வாழும் வழி
குறைந்த அளவு கலப்புடையது தமிழ்தான். கலக்காமலேயே, தமிழைப் பேசவும் எழுதவும் வேண்டிய சொற்கள் தமிழிலேயே உள்ளன. மற்றைய மூன்று மொழிகளும், தம்மிடம் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கிக் கொள்ளுமாயின், மீண்டும் தமிழோடு ஒன்றுபட்ட மொழிகளாகத் தோன்றும். இக்கருத்தை மெய்ப்பிப்பதற்காக நான்கிலும் ஒத்துள்ள சில சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன. ஊன்றி நோக்கின் உண்மை புலனாகும்.
தமிழ் | தெலுங்கு | கன்னடம் | மலையாளம் |
---|---|---|---|
அண்ணன் | அன்ன | அண்ணா | சேட்டன் |
தம்பி | தம்புடு | தம்ம | அனுசன் |
மகன் | குமாரடு | மகனு | ஆண்குட்டி |
மகள் | குமாரத்தி | மகளு | பெண்குட்டி |
பாட்டன் | தாத | தாத | மூப்பன் |
அக்காள் | அக்க | அக்க | சேட்டச்சி |
மாமன் | மாம | மாவ | அம்மாவன் |
எது | எதி | எது | எது |
அது | அதி | அது | அது |
இது | இதி | இது | இது |
சிறிய | சின்ன | சிக்க | சிறிய |
நெருப்பு | நிப்பு | பெங்கி | தீ |
மழை | வானெ | மளெ | மழ |
கொடு | ஈய் | கொடு | கொடு |
இரவு | ராத்திரி | ராத்திரி | ராத்திரி |
பகல் | பகலு | அகலு | பகல் |
யார் | எவரு | யாரு | யாரானு |