பக்கம்:வாழும் வழி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

81


ஊர் ஊரு ஊரு ஊரி
ஊருக்கு ஊரிக்கி ஊரிகே ஊரிலே
சோறு அன்ன ஊட்ட ஊணு
சேலை சீரா சேலை முண்டு
கண் கன்னு கண்ணு கண்ணு
மூக்கு முக்கு மூங்கி மூக்கு
காது செவ்வு கிமி செவி
வாய் நோரு பாயி வாயி
தலை தல தலெ தலை
பசு ஆவு அசுவு பசு
எருது எத்து எத்து காள


மேற்கூறிய சான்றுகளால், இந்நான்கு மொழியினரும் ஒரு காலத்தில் ஒரே மொழியைப் பேசிவந்தனர் என்பது உறுதிப்படுமன்றோ? மற்றும், இப்போது மலையாளம் எனப்படும் பகுதி பண்டைக்காலத்தில் தமிழ் நாட்டின் மூவல்லரசுகளுள் ஒன்றான சேர நாடாகத் திகழ்ந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.

இவ்விதம் இவர்கள் மொழியினால் பிரியாமல் ஓரினத்தவராயிருந்தால், தமிழர், தெலுங்கர், (ஆந்திரர்) கன்னடியர், மலையாளிகள் என்ற நால்வகைப் படாமலும், தனித்தனி ‘மாநிலம்’ (மாகாணம்) கேட்காமலும், ஒரு மொழிப் பெயரினராய் ஒரு மாநிலத்தினராகவே இன்று திகழலாமன்றோ? திகழவே, இவ்வட்டத்திய ஒரே மொழிமக்கள் பலகோடியினர் என்ற பெயரும் கிடைக்குமே! மொழி பிரிந்ததனாலன்றோ மக்கள் பிரிந்து சென்றனர்! இதனை ஊன்றி நோக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/83&oldid=1107792" இலிருந்து மீள்விக்கப்பட்டது