பக்கம்:வாழும் வழி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

83


பிரிந்தவர் போக, தமிழர்களாகிய நாமாயினும் இன்னும் நமக்குள்ளேயே பற்பல மொழியினராகப் பிரிந்து விடாவண்ணம் தற்காத்துக்கொள்ள வேண்டியது நம் கடமையல்லவா? அதுதானே அறிவுடைமையாகும்!

இன்றைக்கு சென்னைத் தமிழன் பேசும் தமிழும், இலங்கைத் தமிழன் பேசும் தமிழும், மலேயாத் தமிழன் பேசும் பேச்சும் வேறுபட்டிருப்பதைப் பார்க்கக் காண்கிறோம். ஓரிடத்தார்பேசும்தமிழை மற்றோரிடத்தார் கேட்டுப் புரிந்துகொள்வது சில நேரத்தில் அரிதாயுள்ளது. ஆயினும், வெவ்வேறு இடங்களிலுள்ள இவர்கள் எழுதியுள்ள சில நூற்களைப் படித்துப் பார்ப்போமானால், பெரும்பாலும் நடையில் ஒத்துள்ளன; புரிந்துகொள்ளவும் முடிகிறது. காரணமென்ன? ஒரே வித இலக்கணத்தைப் பின்பற்றி எழுதியதுதானே! எல்லோரும் வெவ்வேறு விதமாகப் பேசுவது போலவே எழுதவும் தொடங்கிவிடின், புரியாமற் போகுமாதலின் ஒவ்வொருவடைய தமிழும் ஒவ்வொரு வேறு மொழியாக மாறிவிடக் கூடுமன்றோ?

ஆதலின், “பேசுவது போலத்தான் எழுத வேண்டும், இலக்கணம் வேண்டா” என்றெல்லாம் கூறுபவர்கள் இக் கருத்துக்களை நுணுகி யாராய வேண்டும்.

எடுத்துக்காட்டொன்று வருமாறு:- ஒரு பக்கத்தில் ‘வாழ பழம்’ என்கிறார்கள் மக்கள்; மற்றொரு பக்கத்தில் ‘வால பலம்’ என்கிறார்கள்; இன்னொரு பக்கத்தில் ‘வாய பயம்’ என்கின்றனர்; வேறொரு பக்கத்தில் ‘வாச பசம்’ என்கின்றனர். இப்படியே எல்லோரும் எல்லாச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/85&oldid=1107806" இலிருந்து மீள்விக்கப்பட்டது