பக்கம்:வாழும் வழி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

வாழும் வழி


சொற்களையும் வேறு வேறுவிதமாக எழுதத் தொடங்கி விடின் நிலைமை என்னாவது! யார் புரிந்துகொள்வது? (மழை, தலை, எருது முதலிய சொற்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள என்னும் மொழிகளில் சிறுசிறு மாறுதலுடன் இருப்பதை, மேலுள்ள அட்டவணையில் காண்க) ஆகவே, ‘வாழைப்பழம்’ என இலக்கண விதிப்படி எல்லோரும் எழுதினால்தானே எல்லோரும் புரிந்துகொள்ளவும், மொழி சிதையாமலும் மக்கள் பிரியாமலும் இருக்கவும் முடியும்?

எனவே, மக்கள் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் வாழப் பாடுபட்டுத் தொண்டாற்றும் அரும்பெருந் தலைவர்களைப் போல, இலக்கணமும் ஒரு வகையில் தொண்டாற்றும் ஆற்றலுடையது என்பது விளங்கும். எனவே மொழிக்கு இலக்கணம் எவ்வளவு இன்றி யமையாதது என்பது இப்போது இனிது புலனாகுமே!


12. புதுவைத் தமிழ்

திருச்சிராப்பள்ளியை யடுத்த டால்மியாபுரம் திருவள்ளுவர் கழகத்தில் ஒருநாள் மாலை சொற்பொழி வாற்றிவிட்டு, அங்கிருந்து கோயமுத்தூர் செல்வதற்காக, அன்று நள்ளிரவில், டால்மியாபுரம் புகைவண்டி நிலையத்தில், திண்டுக்கல் நோக்கிச்செல்லும் புகை வண்டிக்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது புகைவண்டி நிலையப் பொறுப்பாளர் (Station Master)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/86&oldid=1119180" இலிருந்து மீள்விக்கப்பட்டது