புலவர் சுந்தர சண்முகனார்
85
விளக்கு, கொடி முதலிய கருவிகளுடன் வண்டியை வரவேற்கத் தயாராக வந்துநின்றார். நான் அவரிடம், “இந்த வண்டி எத்தனை மணிக்குத் திண்டுக்கல் போகும்? அங்கிருந்து கோயமுத்துருக்கு உடனே வண்டி உண்டா?” என்பதுபோல ஏதேதோ கேட்டுக் கொண்டிருந்தேன். அவரோடு பேசிக்கொண்டிருந்த சிறிது நேரத்திற்குள் இப்படியும் ஒரு கேள்வி போட்டேன். அதாவது “நீங்கள் வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவரா?” என்று கேட்டேன். “இல்லை. திருச்சி... சென்னை” என்று அவர் ஏதோ சொன்னார். நான் ஒத்துக்கொள்ளவில்லை. ‘நீங்கள் திருச்சியிலோ சென்னையிலோ நீண்ட நாட்களாக இருந்தாலுங் கூட, உங்கள் பெற்றோர் குடும்பம் இப்போது வேறு மாவட்டத்தில் இருந்தாலுங்கூட, நீங்கள் பிறந்து வளர்ந்த இடம் வடார்க்காடு மாவட்டமாகத்தான் இருக்க வேண்டும்’ என்று அடித்துப் பேசினேன் நான். ‘உண்மைதான் என்று இறுதியில அவர் ஒத்துக்கொண்டார். அந்த நள்ளிரவில் என்னை வழியனுப்ப வந்திருந்த டால்மியாபுரம் சிமன்ட் தொழிற்சாலைப் பொறியியல் வல்லுநரும் - திருவள்ளுவர் கழகத் தலைவருமான என் நண்பர் என்னை நோக்கி, ‘அவர் வடார்க்காடு மாவட்டத்தார் தான் என்று எதைக் கொண்டு இவ்வாறு துணிந்து சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். நண்பருக்குச் சொன்ன பதிலையே இங்கேயும் தருகிறேன்.
புகைவண்டி நிலையப் பொறுப்பாளர் பேசிக் கொண்டிருந்தபோது, ‘வண்டி வரச்சொல்ல நாம்