புலவர் சுந்தர சண்முகனார்
87
கண்டுகொள்ளலாம் என்றாலும், அந்த மருத்துவ அறிஞர் நீண்ட நாட்களாகச் சென்னையில் தங்கிவிட்டதால் அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும், உரையாடலின் ஊடே ஓடிவந்த ஒரு சொல் அவரது மாவட்டத்தைக் காட்டிக் கொடுத்துவிட்டது; அவர் ‘பொறவு’ என்னும் ஒரு சொல்லை இடையே கையாண்டார். பிறகு - அப்புறம் என்னும் பொருளில் ‘பொறவு’ என்னும் சொல்லை நெல்லை மாவட்டத்தினர் சொல்கின்றனர். இதே பொருளில் ‘அப்பால’ என்னும் சொல்லைச் சென்னைப் பக்கத்தில் உள்ளவர் சிலர் சொல்லுகின்றனர். ‘பொற வென்ன’ (பிறகு என்ன) என்னும் சொல்லாட்சியை நெல்லை வட்டத்தினரிடம் மிகுதியும் காணலாம். என்னாங்க - என்னையா என்பது போன்ற பொருளில் ‘என்னவே’ என்னும் சொல்லாட்சியையும் இவர்களிடம் காணலாம்.
‘இந்த போடு போடுகிறான்’ - ‘நான் சொல்லிப் போட்டேன்’ - ‘இத்தசோடு பெரிசு’ முதலான ஆட்சிகள் கொங்கு நாட்டாருடையவை. மெதுவாக என்னும் பொருளில் 'பைய-பைய’ என்பதும் வாலப்பலமும் கோலிக்குஞ்சியும் பாண்டிய நாட்டாரது ஆட்சி. வந்துகொண்டு போய்க்கொண்டு என்னும் பொருளில் ‘வந்துகினு - போய்க்கினு’ என்பது தென்னார்க்காடு மாவட்டத்து ஆட்சி. இதே பொருளில் ‘வந்துகிட்டு - போய்க்கிட்டு’ என்பது சோழ நாட்டாருடையது. இடம் என்னும் பொருளில் ‘தாவு’ என்று சொல்வது தொண்டை நாட்டு ஆட்சி. வழி என்னும் பொருளில் ‘தடம்’ என்று சொல்வது பாண்டியநாட்டு ஆட்சி. நமது தமிழ் - நமது