பக்கம்:வாழும் வழி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


1. வாழ்வியல்


1. மக்களாய் பிறந்தோர் வாழும் வழி

மக்களாய்ப் பிறந்தோர் வாழும் வழி என்ன?

“ஒரு நாள் இன்ப வாழ்வு வேண்டுமானால் முடி திருத்தும் கடைக்குச் செல்; ஒரு மாத இன்ப வாழ்வு வேண்டுமானால் ஒரு குதிரை வாங்கிக்கொள்; ஓராண்டு இன்ப வாழ்வு வேண்டுமானால் ஒரு புது வீடு கட்டிக்கொள்; வாணாள் முழுவதும் இன்ப வாழ்வு வேண்டுமானால் நல்லவனாய் நட.” என்பது ஓர் இத்தாலியப் பழமொழியாம். இந்தக் கருத்து நம் நாட்டுச் சூழ்நிலைக்கு எந்த அளவுக்குப் பொருந்துமோ?

முடி திருத்தும் கடைக்குச் சென்று முகத்தை வழித்துக்கொண்டு, ஆகா! என்ன அழகு நம் முகத்தில்! எவ்வளவு வழவழப்பு பளிங்கு போல் பள பளப்பு! என்று வியந்துகொண்டே நிலைக்கண்ணாடியின் முன் நின்று நீட்டி நெளித்து அழகு பார்த்து மகிழ்ந்து பெருமை கொள்கின்றனர் மக்கள். மறுநாள் காலையில் தூங்கி எழுந்து பார்த்தால்; அதே முகத்தில் சொர சொரப்பு. எழுந்ததும் பார்க்க வேண்டுமே அந்த முகத்தின் அழகை!

ஒரு குதிரை வாங்கி ஏறி ஊர்ந்து செல்லின், (அல்லது ஒரு காரே வாங்கினும்,) ஒரு மாதம் சுற்றியடித்துப் பார்த்தால் அலுத்துப் போகிறது. பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/9&oldid=1103450" இலிருந்து மீள்விக்கப்பட்டது