பக்கம்:வாழும் வழி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

89


கொள்ளும்படி ஒப்படைத்துவிட்டுச் சென்றேன். நான் திரும்பி வந்து பையைப் பெற்றுக்கொண்டபோது, கடைக்காரர் என்னை நோக்கி, நீங்கள் புதுச்சேரிக்காரரா? என்று கேட்டார். அவரது வினா என்னை வியப்பில் ஆழ்த்தியது. புதுச்சேரிக்காரன் என்பதற்குரிய அறிகுறிகள் நம்மேல் என்ன இருக்கின்றன என்று என்னையே ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டேன். பின் ‘எதைக்கொண்டு நீங்கள் அப்படிக் கேட்டீர்கள்?’ என்று நான் அவரைக் கேட்டேன். ‘தண்ணீர் கானுக்குச் சென்று முகங்கழுவி வருகிறேன் என்று சொன்னீர்களே அதைக் கொண்டு கண்டுபிடித்தேன்’ என்று சொன்னார் அவர்.

மற்ற ஊர்களில், ‘தண்ணீர்க் குழாய்’ என்று தமிழிலோ, அல்லது ‘பைப்’ (Pipe) என்றும் ‘டேப்' (Tap) என்றும் ஆங்கிலத்திலோ சொல்லுவதை, புதுச்சேரியினர் ‘தண்ணீர் கான்’ என்று சொல்லுவார்கள். இந்தச் சொல்லைக்கொண்டுதான், நீங்கள் புதுச்சேரிக்காரரா? என்ற ஆடுதுறைக்காரர் என்னை மடக்கிவிட்டார். ‘உங்களுக்கு எப்படி இது தெரியும்?’ என்று நான் அவரைக் கேட்டேன். ‘புதுச்சேரிக்குச் சில முறை வந்திருக்கிறேன் - அங்கே இந்தச் சொல்லைக் கேட்டிருக்கிறேன்’ என்றார் அவர்.

‘கான்’ என்பது பிரஞ்சு மொழியில் இல்லை. ‘Can’ (ஒருவகைப் பாத்திரம்), "Canal” (கால்வாய்) என்னும் ஆங்கிலச் சொற்களிலிருந்து வந்ததாகவும் சொல்வதற்கில்லை. இது தமிழ்ச்சொல்லே. காடு, மணம் முதலிய பொருள்களுடைய ‘கான்’ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு, சலதாரை, வாய்க்கால் என்னும் பொருளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/91&oldid=1108974" இலிருந்து மீள்விக்கப்பட்டது