பக்கம்:வாழும் வழி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

91


கடலூர்க்கே புதுமை என்றால், பிற ஊர்கட்கும் புதுமை தானே! என் பட்டறிவுக்குப் புதுமையாகத் தெரிகிறது மற்றவர்க்கு எப்படியோ!

புதுவை மக்கள் ஒருவரையொருவர் காணும் போது நலம் விசாரித்துக்கொள்வதில் வற்றாத குளிர்ச்சி காணப்படும். ‘செளக்கியமா யிருக்கிறீர்களா?’ என்று நலம் விசாரிப்பது பழக்கம் என்றாலும், புதுவையில் அடிக்கடி பார்த்துக்கொள்பவர்கள்கூட, பார்க்கும் போதெல்லாம் ‘செளக்கியமா யிருக்கிறீர்களா?' என்று வாய் குளிரக் கேட்பார்கள். அடிக்கடி விசாரிக்கிறார்களே என்று நான் வியந்ததுண்டு.

மற்ற ஊர்களில் படித்தவர்கள் ‘குட் மார்னிங் சார்‘ (Good Morning Sir), ‘குட் ஈவ்னிங் சார்’ (Good Evening Sir) சொல்வது போல, இங்கே ‘போன் மூர் முசியே’ (Bon Jour Monsieur), “போன் சுவர் முசியே” (Bon Soir Monsieur) என்று சொல்லி, காலை வணக்கமும் மாலை வணக்கமும் செய்வார்கள். அங்கே எடுத்ததற்கெல்லாம் ‘சார் சார்’ (Sir) என்று சொல்வதைப் போல, இங்கே ’முசியே முசியே’ என்பார்கள். அங்கே மிஸ்டர் ஆறுமுகம் என்பதைப் போல, அங்கே ‘முசியே ஆறுமுகம்’ என்றழைப்பர். நன்றி சொல்லும் பொருளில் அங்கே ‘தாங்சு’ (Thanks) என்பதுபோல, இங்கே ‘மெர்சி’ (Mercie) என்பார்கள். இந்த பிரெஞ்சு வழக்காறுகள் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி கையாளப்படுதவதால் இங்கே எடுத்துக் காட்டப்பட்டன. இனித் தமிழ் வழக்காறுகளையே நோக்குவோம்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/93&oldid=1109573" இலிருந்து மீள்விக்கப்பட்டது