உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

93


‘அவன் கையில் திட்டு வாங்கினான்’ என்று சிறுவர்களும் பேசிகொள்கின்றனர்.

பரிட்சையில் தேறவில்லை - மாறவில்லை - பெயிலாய் விட்டது என்றெல்லாம் சொல்வதற்குப் பதிலாக, பரிட்சையில் அடித்துவிட்டார்கள் என்று சொல்லும் வழக்கம் ஈங்குண்டு.

சில ஆங்கில வினைச் சொற்களைத் தமிழ்ப் படுத்திப் பேசும்போது ‘பண்ணுதல்’ என்னும் சொல்லையும் சேர்த்துக்கொள்வது வழக்கம். எடுத்துக்காட்டாக, பர்ஸ் பண்ணுதல், வெய்ட் பண்ணுதல் போன்றவற்றை நோக்குக. ஆனால் இங்கே , ‘இடுதல்’ என்னும் சொல்லைச் சேர்த்துப் பேசும் ஒரு வகை வழக்கம் உள்ளது. எடுத்துக்காட்டாக, பாஸ் பண்ணுதல் என்னும் பொருளில் ‘பசேர் இடுதல்’ (Passer = Pass) என்றும், ஓய்வுகொள்ளுதல் என்னும் பொருளில் ‘ரெப்போசேர் இடுதல்’ (Reposer = Rest) என்றும் சொல்வதைக் கேட்கலாம்.

பிரெஞ்சு மொழி படித்தவரை ‘பாஷை படித்தவர்’ என்றும், பிரெஞ்சுமொழியில் எழுதுதலையில் பேசுதலையும் பாஷையில் எழுதுதல் பேசுதல் என்றும் குறிப்பிடும் வழக்கம் பரவலாக மக்களிடம் உள்ளது. மக்களது வழக்காற்றில், பாஷை என்றால் பிரெஞ்சு மொழி என்று பொருள் போலும்!

கடற்கரையைக் ‘கடலோரம்’ எனக் குறிப்பிடுவது இங்கே பெருவாரியான வழக்காகும். புறப்படுதல் என்பதற்குக் ’கிளம்புதல்’ என்றும், அப்புறம் என்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/95&oldid=1109594" இலிருந்து மீள்விக்கப்பட்டது