94
வாழும் வழி
‘அப்பறமேல்பட்டு’ என்றும் சொல்வதை இளைஞர்கள் இடையே மிகவும் காணலாம்.
புதுவையில் என் கவனத்தை ஈர்த்த மற்றொரு வழக்காற்றைக் குறிப்பிடாமல் விடுவதற்கில்லை. அதுதான் ‘கண்டுபிடித்தல்’ என்பது. இந்தச் சொல் எல்லாரும் அறிந்த ஒன்றேயாயினும், இங்கே ஒரு கோணத்தில் வழங்கப்படுகின்றது. இருவர் உரையாடிக் கொண்டிருக்கும்போது, சொல்வது தெரிகிறதா - புரிகிறதா என்னும் பொருளில், ‘கண்டு பிடிச்சீங்களா’ என்று கேட்பது வழக்கம். ஒருவர் சொல்வதோ அல்லது ஆசிரியர் பாடம் நடத்துவதோ அவனுக்குப் புரியவில்லை - அவன் விளங்கிக் கொள்ளவில்லை என்னும் பொருளில் ‘அவன் கண்டுபிடிக்கவில்லை’ என்று சொல்வது ஈண்டு மிகவும் பழக்கப்பட்ட வழக்காறாகும்.
தண்டோரா அல்லது தமுக்கு அடித்து அறிவிப்புச் செய்வதை ஈண்டு கிறிச்சை கொட்டுதல் என்கின்றனர்.
செல்வராசு, ராஜாபாதர், மஞ்சினி முதலிய பெயர்கள் இங்கே மக்களுக்கு பரவலாக வைக்கப் பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இன்னொரு தனிச்சிறப்புடைய வழக்காற்றோடு இக்கட்டுரையை முடித்துக்கொள்ளலாம். ‘நயா பைசா’ வருவதற்கு முன், ரூயாய் - அணா - பைசா கணக்கு இந்தியா முழுவதும் இருந்ததனை எல்லாரும் அறிவர். ஆனால் புதுவையிலோ, ரூபாய் - பணம் - காசு கணக்குத்தான் பெரும்பாலோர் சொல்லுவர். 24 காசு கொண்டது ஒரு பணம்; 8 பணம் கொண்டது ஒரு ரூபாய். இதுவே பொதுமக்களின் கணக்காகும். புதுவையில்