உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழும் வழி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் சுந்தர சண்முகனார்

95


ஓரணா அரைப்பணமாகும். ஒன்றரையணா முக்கால் பணமாகும். இரண்டனா ஒரு பணமாகும். மூன்றணா ஒன்றரை பணமாகும். பத்தனா ஐந்து பணமாகும். கால் ரூபாய், அரை ரூபாய், முக்கால் ரூபாய் என்பதனினும், இரண்டு பணம், நான்கு பணம், ஆறு பணம் என்னும் வழக்காறுதான் காதில் விழும். முக்காலணா, ஒன்றே காலணா, ஒன்றே முக்காலணா என்பவற்றிற்குப் பதிலாக, ஒன்பது காசு, பதினைந்து காசு, இருபத்தொரு காசு என்றும், மூன்றே காலணாவை ஒரு பணம் பதினைந்து காசு என்றும், மூன்றே முக்காலணாவை ஒரு பணம் இருபத்தொரு காசு என்றும் சொல்லும் வழக்கே ஒரு தனி அழகாகும்.

இதுவரையும் புதுவைத் தமிழ் வழக்காறுகளாகச் சில குறிப்பிடப்பட்டன. இது குறித்துக் கருத்து வேற்றுமையும் இருக்குமோ என்னவோ! ஒரு வட்டாரத்திலேயே ஒரு சில வழக்குகள் ஒரு பிரிவினரிடத்து இல்லையாயினும் வேறு பிரிவினரிடத்தில் இருக்கத் தான் செய்கின்றன. இந்த கண்கொண்டே ‘புதுவைத் தமிழ்’ என்னும் இக்கட்டுரையையும் காணவேண்டும். புதுவைத் தமிழ் என்னும் தலைப்பில், பல மாவட்டங்களின் தமிழ் வழக்காறுகளையும் ஓரளவு பார்த்துவிட்டோமே! (இக்கட்டுரைக் குறிப்புகள் துப்பறியும் துறையினர்க்கும் ஒரு வேளை உதவலாமோ?)

‘புதுவைத் தமிழ்’ என்னும் தலைப்புக்கு, வேறொரு கோணத்தில் நின்றும் பொருள் காணலாம். இந்த இருபதாம் நூற்றாண்டில், உலகில் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் இருக்கும் நாடுகளில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/97&oldid=1109602" இலிருந்து மீள்விக்கப்பட்டது