பக்கம்:வாழும் வழி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

96

வாழும் வழி


புதுவைத் தமிழ் அறியாதவர்கள் இருக்க முடியாது புதுவைத் தமிழை ஒரு முறையாயினும் பாடாதவர்கள் இருக்க முடியாது. அதாவது, உலகத்திற்கு மாபெருந் தமிழிலக்கியங்களைப் பாடித் தந்த புரட்சிப் பாவேந்தர்களாகிய பாரதியாரும் பாரதிதாசனும் தங்கள் தமிழ்ப்படைப்புகளைப் படைத்த இடம் புதுவையே என்பது, நாடறிந்த - ஏன் - உலகறிந்த செய்தியன்றோ!


13. குடிசை

புதுச்சேரிக்குச் சில கல் தொலைவில் ‘இடையன் சாவடி’ என்று ஒரு சிற்றுர் உள்ளது. சில ஆண்டுகட்கு முன் அங்கிருந்து ஒரு பெரியார் என் இல்லத்துக்கு வந்து என்னைக் கண்டு உரையாடினார்; தம் குமாரியின் திருமணத்தில் சொற்பொழிவாற்ற வேண்டும் என்று கோரினார். யானும் இசைந்தேன். இசைவு கண்ட அவர் என்னை விட்டுப்பிரியும்போது, ‘வருக’ என்ற அழைப்போடு மட்டும் செல்லவில்லை; “தாங்கள் வந்தால், காலையில் திருமணத்தை நடத்தி வைத்து விட்டு, உடனே புறப்பட்டுவிடக் கூடாது. ஏதோ என் இருப்பிடம் சிறு குடிசையாயிருப்பினும் நண்பகல் வரை தங்கியிருந்து விருந்தருந்தியே ஊர் திரும்பவேண்டும்” என்ற அன்புக் கட்டளையும் விடுத்தார். “குடிசை யாயினும் மாடமாளிகை கூட கோபுரமாயினும் எல்லாம் ஒன்றுதான்” என்று கூறி யானும் உடன்பட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழும்_வழி.pdf/98&oldid=1119181" இலிருந்து மீள்விக்கப்பட்டது