பக்கம்:வாழையடி வாழை.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

‘வாழையடி வாழை’


பொதுவுடைமைக் கருத்தில் உளம் தோய்ந்தவர் பாரதிதாசனார், 'திருடர்களை உருவாக்குபவன் பொருளைக் குவித்து வைத்திருப்பவனே' என்றும், பொதுவுடைமையோன் 'அத்திருட்டைக் களைவிக்கிறான்,'என்றும் கருத்துரை வழங்கியுள்ளார்.

'எல்லார்க்கும் தேசம், எல்லார்க்கும் உடைமைஎலாம்
எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்ந்திடுக!
எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!

—வீரத்தாய்


என்று விடுதலை முரசம் முழக்குகின்றார் புரட்சிக் கவிஞர்.

பாரதிதாசனார் பாடல்களில் வரும் உவமைகள் எளிய சிறிய உவமைகளாய் உருவகங்களாய் அமைந்து அரிய பெரிய கருத்துக்களை வழங்குகின்றன. எடுத்துக் காட்டுகள் சிலவற்றைக் காண்போம்;

பாண்டியன் பரிசு:


'பனைமரங்கள் இடிவிழக் கிழிந்து வீழும்
பான்மைபோல் இருதிறத்தும் மறவர் வீழ்ந்தார்’
—இயல்5 : 2


'கைத்துாண்டிற் சிறுமீனாய்க் கலங்குகின்ற'
—இயல் 10 : 2


'நெய்யாலே மூண்டெழுந்த நெருப்பைப் போலே’
—இயல்-19 : 2


'வல்லூறு குறிவைத்த புருப்போல் வாழும்
மலர்க்கொடியாள் அன்னத்தின் உள்ள மொன்று’
—இயல் 20 : 1


'செந்நீரில் புரளுகின்ற இரண்டுடம்பும்
தெண்ணீரின் கரைமீனாய்த் துடிக்கும்’
—இயல் 47 : 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/100&oldid=1461275" இலிருந்து மீள்விக்கப்பட்டது