பக்கம்:வாழையடி வாழை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞனும் கவிதையும் 11


களுக்கு அடுத்த நிலையில் குறிப்பு மொழிகள், உணர்ச்சி மொழிகள் அவனுக்குப் பயன்பட்டன. நாம் வியப்பினாலே 'ஆ! ஆ!’ என்று ஆரவாரம் செய்கிறோம். வெறுப்பாலே 'சி! சி!’ என்கிறோம். அவலத்தாலே 'ஐயோ! ஐயோ!’ என்கிறோம். இவையெல்லாம் உணர்ச்சி நம்க்குத்தந்த சொற்கள். இவையும் வளர்ந்த பின்னரே மொழியின் தோற்றமும் முகிழ்த்தது எனலாம். மொழி மெல்லமெல்ல வளர்ந்து, வளம் பெற்றிருக்க வேண்டும். வளம்பெற்ற நிலையில், நல்ல வாழ்வு அந்த மொழிக்கு ஏற்பட்டு, இலக்கியங்கள் எழத் தலைப்பட்டன; எனவே, செம்மை சான்ற பழைய இலக்கியங்கள். ஒரு மொழியின் பழமையினையும் சிறப்பினையும் நன்கு விளக்குவனவாகும். 'கடவுள் உலகத்தைப் படைத்தார்; மனிதன் மொழியைக் கவிதையைப்படைத்துக் கொண்டான்,' என்று கூறுவர். 'மனிதன் தன் கருத்துளைப் பிறர்க்கு உணர்த்த, தான் எண்ணிய எண்ணத்தைப் பிறர் மனத்திலும் பதியவைக்கும் முயற்சியிலே படைத்துக் கொண்ட சாதனமே மொழி' எனலாம். மனிதன் சிந்தனையாற்றல் உடையவன்; அவன் சிந்திக்கத் தொடங்கிய காலமே மனித நாகரிகத்தின் தொடக்கக் காலமாகும். மனித சிந்தனையின் அளவு கோல்களே நாகரிகம், கலை முதலியனவாகும். மொழி நன்கு வளர்ந்த நிலையில்வாழ்வும் வளமும் பெற்ற போது மனிதன் படைத்துக்கொண்டவையே கலைகள்.

இக்கலைகள் பல வகைப்படும். தமிழ்க் கவிஞர் ஒருவர்,

'ஆய கலைகள் அறுபத்து நான் கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை’

என்று கலைமகளைக் கனிந்து பாடினார். கலைகள் பல வகைப்படும். இசை, இலக்கியம், ஒவியம், சிற்பம், நாட்டியம், நாடகம் முதலியன 'கலைகள்’ எனப்படும். மேலும், இவை நுண்கலைகள்: (fine arts), அல்லது கவின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/13&oldid=1461204" இலிருந்து மீள்விக்கப்பட்டது