பக்கம்:வாழையடி வாழை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

‘வாழையடி வாழை’


யுள்ளார்.1 'கற்பனையின் வெளியீடே கவிதை,' என்பது கவிஞர் 'ஷெல்லி'யின் சித்தாந்தம். மேலும் அவர், 'மகிழ்ச்சி நிறைந்த சிறந்த உள்ளங்களின், மகிழ்ச்சி நிறைந்த சிறந்த நேரங்களின் படைப்பே கவிதை’ என்று கூறுகிறார்.2

'பித்தன், காதலன், கவிஞன் இம்மூவரும் ஒர் இனம்' என்பர். இவர்கள் தங்களை மறந்த நிலையில் இருப்பவர்கள். தன்னை மறந்த நிலையில் கவிஞன் சிறந்த படைப்புகளைப் படைக்கிறான். கவிஞன் தன் கற்பனைத் தேரில் ஏறிக் கனவுலகிற்குச் சென்று விடுகின்றான். அங்கே தான் உற்ற பெற்ற அனுபவங்களைக் கவிதையாகச் சொல்லில் வடித்து அளிக்கின்றான். நாம் அன்றாடம் காண்கின்ற காட்சிகளையே அவன் கண்டாலும், அவன் கூறுகின்ற முறையில் ஒரு புதுமை இருக்கின்றது. கடவுளின் படைப்பில் அமைந்துள்ள கவின்பெறு காட்சிகள் எல்லாம் நமக்குப் பழக்கம் காரணமாகத் தம் கவர்ச்சியை இழந்துவிடுகின்றன. ஆனால், அக் காட்சிகளைக் கண்டு கவிஞன் சொல்லும்பொழுது, நாம் கவிஞனது 'திறம் வியந்து நம் செயல் மறந்து' வாயடைத்து நிற்கிறோம்.3 காலையில் கதிரவன் உதிக்கும் காட்சியினை நாம் பலமுறை கண்டிருக்கிறோம்; நாளாக நாளாகப் பெரிதும் அதனை வியப்பதில்லை. ஆனால், அக்காட்சியினைக் கவிஞன்


1. Poetry is the spontaneous overflow of powerful feelings; it takes its origin from emotion recollected in tranquility.
2. Poetry is the record of the happiest and best moments of the happiest and best minds.
3. Poetry lifts the veil from the hidden beauty of the world and makes familiar objects as if they were not familiar.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/16&oldid=1461206" இலிருந்து மீள்விக்கப்பட்டது