பக்கம்:வாழையடி வாழை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

‘வாழையடி வாழை’


சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டந்
தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள்’

அழகின் சிரிப்பு: 1


நாம் அன்றாடம் காணக்கூடிய காலையிளம் பரிதியும், கடற்பரப்பும், ஒளிப்புனலும், சோலையும், மலரும் தளிரும், மாலையும், ஆலஞ்சாலையும், வானும், மீனும், குயிலும், கிளியும் கவிஞர்க்குக் கவிதைப் பொருள்களைப் படைக்கின்றன. நாம் கண்ணிருந்தும் குருடர்களாய், செவியிருந்தும் செவிடர்களாய், வாயிருந்தும் மூங்கைகளாய் வாழ்கின்றாேம்! கவிஞன், இயற்கையின் கவினார் காட்சிகளைக் கண்டு, இனிய ஒசைகளைக் கேட்டு, இன்பப் பாடல்களைப் பாடி நம்மை மகிழ்விக்கின்றான். இங்கே 'தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!' என்ற பரந்துபட்ட எண்ணமே அவன் கவிதைப் பிறப்பிற்குக் காரணமாய் அமைகின்றது.1

பிறிதொன்றனையும் நாம் இங்கே ஊன்றி நோக்கல் வேண்டும்; கவிதை முதன் முதல் சமுதாயத்தில்தான் தோன்றியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் கும்மரே கூறுவர்.2 ஆனால், இக்கூற்றுக்கு மறுப்பும் உண்டு. ஆங்கிலக் கவிஞராம் 'டி. எஸ். எலியட்டு’. என்பார், காட்டுமிராண்டி ஒருவன் காட்டில் பறை


1. Poetry is , at all events, the Poets’ criticism of life that is the impression which life, as he sees and imagines. It makes upon his emotion and which he, in turn tries to impress upon ours.
2. Investigations into the beginnings of literature have shown that poetry originated in the desire to give outward form to the feelings not of the individual but of the clan or group.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/18&oldid=1461208" இலிருந்து மீள்விக்கப்பட்டது