பக்கம்:வாழையடி வாழை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞனும் கவிதையும் 17


யைத் தானே அடித்து மகிழ்வு கொண்ட நிலையில் பாட்டின் தொடக்கம் அமைந்திருக்கவேண்டும்’ என்கிறார்.1

அந்த நாகரிகமற்ற மனிதன் பறையின்றியும் தன் கையால் தாளம் கொட்டிப் பாடி மகிழ்ந்தான். துன்ப மானகடினமான தொழிலாற்றும் பொழுது, அவன் பாடிய காலத்தில், துன்பத்தின் சுமை சிறிது குறைந்ததைக் கண்டான். அதுவே சமுதாயமாய்ப் பலர் கூடி வேலை செய்கின்ற பொழுதும், குழுப்பாட்டுகளாக, உணர்ச்சி வயப்பட்டு ஆரவாரித்துப் பாடல்களைப் பாடினர். இவையே சமுதாயப் பாடல்கள்’ எனப்படும். இம்முறையில் அமைந்தவையே ஏற்றப்பாட்டு, ஏலேலோப் பாட்டு, பண்ணைப்பாட்டு, சுண்ணப்பாட்டு, கும்மிப் பாட்டு முதலியன. இவற்றையெல்லாம் பாரதியார் நெஞ்சைப் பறிகொடுத்த இடங்களில் கண்டோமல்லவா?

சிலப்பதிகாரத்திலே உள்ள, 'குன்றக்குரவை’ மலைவாழ் மக்கள் ஆடிப்பாடிக் களித்த வாழ்வினைப் புலப்படுத்துகின்றது. 'ஆய்ச்சியர் குரவை' முல்லை நிலத்து ஆயர்குல மக்களின் இசையொடு நெருங்கிய இனிய வாழ்வினைத் தெரிவிக்கின்றது. 'வேட்டுவ வரிப் பாடல்கள்’ பாலை நில மக்களின் கூட்டு வாழ்வைக் காட்டுகின்றன.

இவை வளர்ந்த நிலையில் 'வரிப்பாடல்கள்' முகிழ்த்தன. சிலம்பின் 'ஊர் சூழ்வரி' இதனைத் தெளிவுறுத்தும். கானல் வரியின் சிறப்பினையும் இங்கே கருதுதல் நலம், பின்னரே தமிழில் அகப்பாடல்களும், புறப்பாடல்களும் மலர்ந்தன.


1. Poetry begins, I dare say, with a savage beating a drum in a jungle, and it retains that essential of percussion and rhythm.
வா2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/19&oldid=1461209" இலிருந்து மீள்விக்கப்பட்டது