பக்கம்:வாழையடி வாழை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'வாழையடி வாழை' 21


புகழ் உடம்பு பெற்றுள்ளனர். இதனையே தமிழ்நாடு செய்தவப் பயனாய்த் தோன்றிய திருவள்ளுவப் பெருங்தகையும்,

தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று’

திருக்குறள்: 236


என்று கூறுகிறார். இதனையே புறப்பாடல் ஒன்று,

உரையும் பாட்டும் உடையோர் சிலரே
மரையிலை போலமாய்ங் திசிளுேர் பலரே.”

புறநானூறு: 27 : 5-6


என்று பேசுகிறது.
முதலாவதாக இவ்வுலகில் பிறந்த உயிர்கள், பிறப்பின் பெருமையினை உணர வேண்டும். பின்னர், இவ்வுலகின் புன்மையினை நிலையாமையினை நன்குனர்ந்து, பெறுதற்கரிய மனிதப்பிறவி கிடைத்ததன் நற்பேற்றினை எண்ணிப் பயனுடைய செயல்களை இவ்வுலகில் தங்கள் வாழ்நாளில் ஆற்றிச் செல்ல வேண்டும்.

இதனை

மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே’

என்று புறநானுாறு (165 : 1-2 உணர்த்தி நிற்கின்றது. இவ்வுலகின் நிலையாமைப் போக்கினைக் கண்டு தெளிதல் வேண்டும். ஞானியர் சிலர்தம் கூற்றும், சித்தர் பாடல்களும் இத்தெளிவினை நமக்குத் தர வல்லவை. தம் ஆருயிர் மனைவி அறுசுவை உணவினைச் சுவையுடன் சமைத்து வைக்க, அதனை இனிதுண்ட ஒருவர், பின்னர், அவளுடன் மகிழ்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது, 'இடப்பக்கம் சிறிது நோகிறது’என்று கூறிய அளவிலேயே உயிர் துறந்தார் என்று 'திருமூல நாயனார்’, யாக்கை நிலையாமையினை ஒரு பாட்டில் பசுமரத்தாணியென மனத்திற் பதியும் வண்ணம் உணர்த்தியுள்ளார். அப் பாடல் வருமாறு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/23&oldid=1461213" இலிருந்து மீள்விக்கப்பட்டது