பக்கம்:வாழையடி வாழை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

‘வாழையடி வாழை’

தமிழ்ப் பெருங்கவிஞர்பால் தண்டாத காதல் கொண்டவர் பாரதியார். கம்பர் வள்ளுவர் இளா கோவைப்போலப் பூமியில் எங்கும் புலவர் இதுகாறுப் பிறந்ததில்லை என்கிறார் கவிஞர்.

'யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
        வள்ளுவர்போல் இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்
        உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை’

-தமிழ்

மேலும்,

'சிலப்பதி' காரச் செய்யுளைக் கருதியும்
திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின் ஆழமும் விரிவும் அழகும் கருதியும், 'எல்லையொன் றின்மை’ எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளாற் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும், முன்பு நான்தமிழ்ச் சாதியை அமரத் தன்மை வாய்ந்தது என்று உறுதிகொண் டிருந்தேன்?'

-தமிழ்ச்சாதி: 20_

என்றும்,

'கம்பன் என்றாெரு மானிடன் வாழ்ந்ததும்

சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்’

-சுயசரிதை: 24_ என்றும்,

'கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
        கம்பன் பிறந்த தமிழ்நாடு’

-செந்தமிழ் நாடு என்றும்,

வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
        வான்புகழ் கொண்ட தமிழ்நாடு; நெஞ்சை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/34&oldid=1349939" இலிருந்து மீள்விக்கப்பட்டது