பக்கம்:வாழையடி வாழை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'பாட்டுக்கொரு புலவன் பாரதி' 43

என்று கூறும் கவிஞரின் கூற்று, பொருள் நிறைந்ததாகும்.

'கண்ண பெருமானே’ என்னும் பாட்டில், காயில் புளித்தும், கனியில் இனித்தும், நோயில் படுத்தும்: நோன்பில் உயிர்த்தும், காற்றில் குளிர்ந்தும், கனலில் சுட்டும் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரதத்துவத்தினை விளக்குகின்றார் பாரதியார். 'நந்தலாலா’ப் பாட்டில் காக்கைச் சிறகின் கருமையிலும், பார்க்கும் மரத்தின் பசுமையிலும், கேட்கும் ஒலியின் கீதத்திலும், தீக்குள் விரலை வைத்து அடையும் உணர்ச்சியிலும் கண்ணனைக் காண்கிறார் கவிஞர்.

பிறிதோரிடத்தில், ஞாலமுற்றும் பராசக்தியின் தோற்றமாகக் காண்கிறார் கவிஞர். அங்கு ஞானமென்ற விளக்கினை ஏற்றிக் காலமுற்றும் காதலென்பதோர் கோயிலின்கண் துதித்து நிற்கிறார் கவிஞர்.

மங்கியதோர் நிலவில் பொங்கிவரும் பெருநிலவு போன்ற முகமும், புன்னகையின் புதுநிலவும் போற்ற வருந் தோற்றமும் கொண்ட அழகுத் தெய்வத்தினைக் கனவில் கவிஞர் காண்கின்ற காட்சி, அற்புதக் காட்சியாகும்.

அடுத்து, பாரதியார் பெண்களைப் பற்றியும் காதலைப் பற்றியும் பாடியுள்ள பகுதிகளை நோக்குவோம்.

‘அமுதூற்றினையொத்த இதழ்கள், நிலவூறித் ததும்பும் விழிகள், பத்து மாற்றுப் பொன்னொத்த மேனி' எனக் கண்ணம்மாவை எண்ணிக் களிக்கிறார் கவிஞர்.

'காதலெனுந் தீவினிலே ராதே ராதேஅன்று
கண்டெடுத்த பொன்மணியே ராதே ராதே!’

என்னும் ராதைப்பாட்டில், ‘காதலெனுந் தீவினிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/45&oldid=1461233" இலிருந்து மீள்விக்கப்பட்டது