பக்கம்:வாழையடி வாழை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'பாட்டுக்கொரு புலவன் பாரதி' 45


குணங்கள் என்றும், 'நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்’ என்றும் கூறிய பாரதியார்,

'நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்’

புதுமைப் பெண். 7


என்று குறிப்பிடுகின்றார்.

பட்டங்கள் பெற்றுச் சட்டங்கள் செய்வதோடு, எட்டும் அறிவினில் ஆணுக்கு இளைப்பில்லாத பெண்கள் சாதம் படைப்பதோடு தெய்வச் சாதியினையும் படைக்கின்றார்கள். 'படித்து விட்டால் திருமணம் வேண்டா' என்று கூறும் பெண்களுக்குச் சவுக்கடி கொடுப்பவளைப் போலப் புதுமைப் பெண் பின் வருமாறு கூறுகிறாள்:

'காதலொருவனைக் கைப்பிடித்தே அவன்
காரியம் யாவிலும் கைகொடுத்து
மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச்செய்து வாழ்வமடி!’

'மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தி, தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே! என்கிறார் பாரதியார். 'காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே காற்றிலே ஏறி அவ்விண்ணையும் சாடுவோம்! என்கின்றனராம் ஆடவர்.

பாரதியாரின் படைப்புகளில் முதல் இடம் பெறுவது 'கண்ணன் பாட்டே!’ கண்ணனைத் தோழனாய், தாயாய், தந்தையாய், சேவகனாய், அரசனாய், சீடனாய், சற்குருவாய், விளையாட்டுப் பிள்ளையாய், காதலனாய், காந்தனாய், ஆண்டானாய்க் காண்கின்றார் பாரதியார். இதுபோன்றே, கண்ணம்மா வைக் குழந்தையாய், காதலியாய், குலதெய்வமாய்க்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/47&oldid=1461236" இலிருந்து மீள்விக்கப்பட்டது