பக்கம்:வாழையடி வாழை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'பாட்டுக்கொரு புலவன் பாரதி’

   இன்பக் கதைகளெல்லாம்-உன்னைப்போல் ஏடுகள் சொல்வதுண்டோ? என்று பராசக்தியைக் குழந்தை கண்ணம்மாவாகக் கொண்டு பாரதியார் அரிய பாட்டொன்று புனைந்துள்ளார்.
  பழைய கதையில் புதிய கருத்தை நுழைத்துப் பாடிய பாட்டு, பாஞ்சாலி சபதம்’ ஆகும். உணர்ச்சி நிறைந்த காவியம் இது. நன்றி கெட்ட விதுரா! சிறிதும் நாண மற்ற விதுரா?’ என்று விதுரனை விளித்துத் துரியோதனன் கூறும் கூற்றில், உணர்ச்சி கொப்பளித்து வருவதனைக் காணலாம். 'ஐவருக்கு நெஞ்சும்-எங்கள் அரண்மனைக்கு வயிறும்' என்பது என்ன அழகான தொடர்!
  பாஞ்சாலி சபதத்தில் உவமை அழகிற்கும் குறை வில்லை என்பதனைப் பின்வரும் பாடலிற் காணலாம்.
 கோயிற் பூசை செய்வோர்- சிலையைக்
    கொண்டு விற்றல் போலும், வாயில் காத்து நிற்போன் வீட்டை 
     வைத்தி ழத்தல் போலும் ஆயிரங்களான- நீதி
     யவைஉ ணர்ந்த தருமன் தேயம் வைத் திழந்தான்;-சிச்சீ!
    சிறியர் செய்கை செய்தான்!" 
     - பாஞ்சாலி சபதம்: 219 பாஞ்சாலி சபதம், தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்’...... 'கருமத்தை மேன்மேலுங் காண்போம், இன்று கட்டுண்டோம்; பொறுத்திருப்போம்;  காலம் மாறும்' என்னும், அரிய கருத்தினை உணர்த்தி நிற்கின்றது.
  'முன்னிக் கவிதை வெறிமூண்டே நனவழியப்

பட்டப் பகலிலே’ பாரதியார்க்குத் தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/49&oldid=1340041" இலிருந்து மீள்விக்கப்பட்டது