பக்கம்:வாழையடி வாழை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

`பாட்டுக்கொரு புலவன் பாரதி 49

`தமிழால், பாரதி தகுதி பெற்றதும், தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் !

       -பாரதிதாசன் கவிதை : இரண்டாம் தொகுதி 

பல்கலைச் செல்வர்-பேராசிரியர்-தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் அவர்கள், பாரதியார் பாடல்களைப் பற்றிப் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

``பாரதி திலகர் யுகத்தின் இனிய உயிருள்ள குரலாக நின்று தமிழ் நாட்டில் பாடத் தொடங்கினார். பொது மக்களுக்கு விளங்கும் நடையில், பொது மக்கள் விரும்பிப் பாடிவந்த நாடோடிப்பாடல் நடையில் பாடினார். புதிய உணர்ச்சி-ஆனால் உள்ளூற உள்ளத்தில் துடிக்கும் உணர்ச்சி-இன்றைய இழிவு, சென்ற காலத்தின் சிறப்பு, எதிர்காலத்தில் நம்பிக்கை, உலக முழுவதிற்குமாகத் துடிக்கின்ற துடிப்பு, உரிமை வேட்கை, எங்கும் கடவுளென்ற பழங்கொள்கையின் புது விளக்கம். இதன் பயனுகப் ‘புலையனுக்கும் விடுதலை’ என்று பாடுவதோடு நில்லாமல், `காக்கை குருவி எங்கள் ஜாதி' என்று காணும் விடுதலைச் சகோதரச் சமத்துவம், ஆன்ம நேய ஒருமைப்பாடு, மதம் பிடித்த யானையை உடன் பிறப்பின் அன்போடு நெருங்கி உயிர் கொடுக்கும் கொள்கையின் உறுதி. உலகத் துன்பத்தை எவ்வகையேனும் மறந்து, இந்த உயரிய உணர்ச்சிகளைப் பாட்டாகப் பாடி, மக்களை எழுப்பத் துடிதுடிக்கும் உள்ளத்துடிப்பு ,ஆனால், இவையனைத்தையும் கடவுள் வழிபாடென்ற நோக்கம், ஆற்றல் மிக்க சக்தி வழிபாடு, இந்தத் தாயாம் பெருஞ் சக்தியாகத் தமிழ் நாட்டையும் இந்திய நாட்டையும் தமிழரையும் இந்தியரையும் அத்தாயின் கைகளாகக் கொண்டு விளக்க முந்தும் நெஞ்சுரம், பழைய பண்பாட்டின் நிலையங்களாக இந்த மக்களைக் காண்கின்ற காட்சி, தன் கடவுளைக் கண்ணனாக்கி எல்லா:உறவு வா~~4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/51&oldid=1340035" இலிருந்து மீள்விக்கப்பட்டது