பக்கம்:வாழையடி வாழை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 வாழையடி வாழை’

களிலும் தொடர்புகளிலும் அவனைக் கண்டு அன்பு நெக்குருகும் பக்தி, அடிமைத் தளையைத் தகர்த்தெறிய முயலும் முயற்சியைப் பரிபூரணன் வடிவமாய்க் கிடக்கும் இந்திய நாட்டு மக்களின் வழிபாடாக உணரும் ஆழம், கடவுள்வழிபாடு, இவ்வாறு மக்கள் வழியாகத் தோன்றும் உண்மை, இந்தக் காட்சியால் விடுதலைப் போராட்டத்திற்கென எழும் புதிய ஊக்கம், அரசியல் விடுதலை மட்டுமின்றிச் சமுதாய விடுதலைக்கென ஆனந்தப் பள்ளுப்பாடும் களிப்பு, பொருளாதார விடுதலையினை நாடியதால், தனியொருவனுக் குணவிலையெனில் சகத்தினை அழித்திடுவோம்!” என்ற வீரமுழக்கம், பெண்களைச் சக்திகளாகக் கொண்டு கும்மி அடிக்கும் இன்பக் கூத்து, விடுதலையை எதிர்த்து நிற் பாரைப் பழைய பாடல்களைப் பாடி இகழும் கையாண்டித்தனம், எதிர்ப்பை எரிக்கும் எரிவு, நாட்டின் இழிவினையும் நாட்டு மக்கள் ஆங்காங்கே படும் துன்பத்தையும் எண்ணி, ஆ!கரும்புத் தோட்டத்திலே’ என்று கதறும் கதறல், சிறுவரையும் தட்டியெழுப்பி, அச்சமில்லை, அச்சமில்லை, ஜயபேரிகை கொட்டடா!’ என்ற ஆரவாரம், பெருமக்களை எல்லாம் பண்பாட்டின் அடையாளமாக்கி வாழ்த்தி எடுத்துக்காட்டும் நன்றி மறவா உள்ளம், பாரதப் பழங்கதையினையும் தீமையின் வீழ்ச்சியை விளைவிக்கும் பெண்ணின் பெருமையாகப் பாடும் வீரக்காப்பிய விருப்பு-இந்தப் பல வகை விடுதலை வாழ்வை எல்லாம் சித்தர்கள் பாட்டைப் போல ஆன்மிகக் காதல் வாழ்வாகக் கண்டதனை வெளியிடும் குயில்பாட்டு, இவையெல்லாம் ஒருங்கு திரண்டதே பாரதியாரின் பாடல்.’

தேசியக் கவியாயும், பாட்டுக்கொரு புலவராயும் வாழ்ந்த பாரதியாரின் பாடல்களைப் பாடிப்பாடிக் கவிதையழகில் களிப்புற்று, மாருத மனமகிழ்ச்சியில் கிளைத்திருப்போமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/52&oldid=1340038" இலிருந்து மீள்விக்கப்பட்டது