பக்கம்:வாழையடி வாழை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

‘வாழையடி வாழை’


ஆண்டு செப்டெம்பர்த் திங்கள், இருபத்தாறாம் நாள், கவிமணி அவர்கள் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார்கள். கவிமணியினை 'நாமக்கல் கவிஞர்' நம் மனக்கண் முன் தோற்றுமாறு கொண்டு வந்து காட்டுகின்றார். பின் வரும் பாடலைக் காண்க:

'துரும்பென மெலிந்த தேகம்
துலங்கிடும் குளிர்ந்த பார்வை
இரும்பினும் வலிய உள்ளம்
இனியவே செய்யும் எண்ணம்
பரம்பொருள் நினைவே காட்டும்
பாரெலாம் பரந்த நோக்கம்
கரும்பினும், இனிய சொற்கள்
கவிமணி வடிவ மாகும்.’

கவிமணியின் பாடல்கள் எளிமையும் இனிமையும் நிறைந்தவை. 'எளிமை இல்லையென்றால், கவியில்லை,' என்பது இன்றைய அளவுகோல். பெண்மை, தன்மை, எளிமை ஆகிய மூன்று பண்புகள் கவிமணியின் பாடல்களில் வேரோடி நிற்பதைக் காணலாம். அன்பு, அருள், ஆழ்ந்த தெய்வ பக்தியில் முகிழ்த்தவை அவருடைய பாடல்கள். எங்கும் காணும் எளிய வாழ்வின் உண்மைகளே அவர் பாடலின் அடிப்படை ஊற்றுகளாய்த் துலங்குகின்றன. மக்கட் பண்பாட்டின் உரைகல்லாய்க் கவிமணியின் பாடல்கள் கருக்கொண்டுள்ளன.

'உள்ளத் துள்ளது கவிதைஇன்பம்
உருவெடுப்பது கவிதை
தெள்ளத் தெளிந்த தமிழில்உண்மை
தெரிந்து ரைப்பது கவிதை

மலரும் மாலையும் : கவிதை 7


என்று கவிமணி அவர்கள் கவிதைக்கு இலக்கணம் கண்டுள்ளார்கள். அவ்விலக்கணத்திற்கு இயைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/54&oldid=1461239" இலிருந்து மீள்விக்கப்பட்டது