பக்கம்:வாழையடி வாழை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை' 57


நாவால் நக்குது வெள்ளைப்பசுபாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி
'முத்தம் கொடுக்குது வெள்ளைப்பசுமடி
முட்டிக் குடிக்குது கன்றுக்குட்டி’

'எனது சுகதுக்கங்கள்' என்னும் கவிதை உயரிய ஒரு படைப்பு; அருமையான தத்துவ விளக்கம்:

'வான வெளிதனிலேகவிந்தெழு
மாலைப் பொழுதினிலே
கூனப் பிறைவரவேசிவன்திருக்
கோலம் தெளிவேன் அடி’

என்று மகிழ்ந்த கவிமணியின் இதயம்,

காவுயர் சோலையிலேபசுவோடு
கன்று களிக்கையிலே,
தாலிப் புலிவிழவேவருந்துயர்,
தாங்க முடியவில்லை’

என்று ஒலமிடுகின்றது. கனிவு நிறைந்த உள்ளம் கவிமணியின் உள்ளம்.

'வாழ்க்கைத் தத்துவங்கள்’ என்ற பகுதியில், ஒருவர் உயர்வுக்கு அவர் செயல்களே காரணமாய் அமைகின்றன என்னும் அரிய உண்மையினை அழகுறப் புலப்படுத்தியுள்ளதனைக் காணலாம்.

உள்ளந் தேறிச் செய்வினையில்
ஊக்கம் பெருக உழைப்போமேல்,
பள்ளம் உயர்மே டாகாதோ?
பாறை பொடியாய்ப் போகாதோ?”

இவ்வாறு கூறுவதனோடு கவிஞர் நில்லாமல், இறைவனது ஆனையினை அறச்சட்டத்தினைஎவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/59&oldid=1461240" இலிருந்து மீள்விக்கப்பட்டது