பக்கம்:வாழையடி வாழை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

‘வாழையடி வாழை’


மரகத வீச்சு! நீரில் மிதக்கின்ற மரங்க ளின்மேல்
ஒரு நாரை வெண்டா ழம்பூ உவப்புக்கோ உவமை இல்லை’

—அழகின் சிரிப்பு: ஆறு: 7


செந்தாமரை மலர் எவரையும் எளிதில் கவர்ந்து தன்பால் பார்வையை இழுக்க வல்லது. மலர்களின் மகிழ்ச்சிப் பொலிவினை மனக்கும் தமிழில் கவிஞர் கூறுவாா:


'விண்போன்ற வெள்ளக் காடு மேலெல்லாம் ஒளிசெய் கின்ற
வெண்முத்தங் கள்கொழிக்கும் பச்சிலைக் காடு மேலே
மண்ணுளார் மகிழும் செந்தா மரைமலர்க் காடு; நெஞ்சைக்
கண்ணுளே வைக்கச் சொல்லிக் கவிதையைக் காணச் சொல்லும்.

—அழகின் சிரிப்பு : செந்தாமரை: 5


இம் மட்டோடு கூறிக் கவிஞர் நிறுத்தினரில்லை. 'ஆயிரம் பெண்கள் நீரில் ஆர்ப்பாட்டம் போலும் பூக்கள்' என்று அழகுறக் குறிப்பிட்டுள்ளார்.

நிலவான் மறைக்கும் ஆலமரத்தை அழகுற வருணித்த கவிஞர், அம் மரத்தில் வாழும் குரங்கின் அச்சத்தினைக் குறிப்பிடும் போக்கு நம்மைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்கவைக்கின்றது. எளிய பாட்டு; எனவே, பாடலையே படித்துச் சுவைப்போம்:


கிளையினிற் பாம்பு தொங்க
விழுதென்று: குரங்கு தொட்டு
விளக்கினைத் தொட்ட பிள்ளை
வெடுக்கெனக் குதித்த தைப்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/72&oldid=1461249" இலிருந்து மீள்விக்கப்பட்டது