பக்கம்:வாழையடி வாழை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 75


மாலையில் ஒளி மங்கி, இருள் தன் போர்வையை எங்கும் விரித்த பின்னர், இருட்பகை போக்கிட எழுகின்ற எழில் நிலாவினைப் பாடிய கவிஞர் பலர். ஆனாலும், நம் கவிஞர் நிலவை வண்ணமுற வருணிக்கிறார்; அவ்வருணனையின் இடையே தமது கருத்தினையும் பொருத்தமுறப் புகுத்தியுள்ளார். அழகாட்சி புரியும் நிலாப் பற்றிய அவர் கவிதையில் மூன்றனைப் படிக்கும்பொழுது, அவரை 'உலகக் கலிஞர்' (Universal. Poet) என்று ஒருமனமாகப் பாராட்ட வேண்டியிருக்கிறது. கற்பனை (Imagination), உணர்ச்சி ( Emotion), வடிவம் (Form), கருத்து (Content) ஆகிய நான்கும் அமைந்த அவர் பாடல்களைக் கீழேக் காண்க:

'நீலவான் ஆடைக்குள் உடல்ம றைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுக த்தைக்
கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச்
சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்!
சொக்கவெள்ளிப் பாற்குடமோ !அமுத ஊற்றாே!
காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ!
அந்தியிரு ளாற்கருகும் உலகு கண்டேன்:
அவ்வாறே வான்கண்டேன்; திசைகள் கண்டேன்;
பிந்திய யந்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ?
பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ நிலவே நீதான்!
சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம்
சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி
'இந்தாஎன் றே' இயற்கை அன்னை வானில்
எழில்வாழ்வைச் சித்தரித்த வண்ணங் தானோ!
'உனைக்காணும் போதினிலே என்னுளத்தில்
ஊறிவரும் உணர்ச்சியினை எழுது தற்கு
நினைத்தாலும் வார்த்தைகிடைத் திடுவ தில்லை:
நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/77&oldid=1461254" இலிருந்து மீள்விக்கப்பட்டது