பக்கம்:வாழையடி வாழை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

‘வாழையடி வாழை’


தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள்
சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்
கவின்நிலவே! உனக்காணும் இன்பங் தானோ!'

—பாரதிதாசன் கவிதைகள் : புரட்சிக்கவி


'இயற்கை வருணனையே என்றாலும், மக்கள் வாழ்வு தான் உயிர் நாடி, உரிப்பொருளே முதலிடம் பெறுவது', என்கிற சங்கத் தமிழ் மரபு, சித்தர் பாட்டு, இப் பாடலில் விளக்கமுறக் காணலாம்.

இரண்டாம் தொகுதியில் இடம் பெற்றுள்ள 'தென்றல்' என்னும் கவிதை, கருத்தாழமுடையது; கற்பனையுணர்ச்சி கெழுமியது. தென்றலைத் திறம் படக் கவிஞர் காட்டுகின்றார்:


'அந்தியில் இளமுல்லை. சிலிர்க்கச் செந்நெல்
அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன்
சிந்தைஉடல் அணுஒவ்வொன் றும்சி லிர்க்கச்
செல்வம் ஒன்று வரும்! அதன் பேர் தென்றற் காற்று’

என்கிறார். இம்முறையாகக் கிளத்துவது ஒரு நயமான முறை—நவமான முறையன்றாே?

கவிஞர் அந்தியில் கொல்லையில் மனைவியாரோடு இருந்தார். தென்றல் இதமாய் வீசிற்று. வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளிவிட்டதெனக் கவிஞர்தம் மனைவியார் அறைக்குள் போனார். தனித்திருந்த விசுப்பலகையில் கவிஞர் படுத்தார். பக்கத்தில் அமர்ந்து சிரித்துப்பேசிப் பழந்தமிழின் சாற்றாேடே காதல் சேர்த்து நிற்காமல், பூனையைஓட்டச்சென்ற பூவையார்மீது அடங்காத சினம் வந்தது கவிஞருக்கு. பிரிவால் வேதனையுற்றார் கவிஞர். மனைவியாரின் உடற்குளிர்ச்சி, மென்மை, மணம் இவற்றை நுகர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/78&oldid=1461255" இலிருந்து மீள்விக்கப்பட்டது