பக்கம்:வாழையடி வாழை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 77


நினைவு கொண்டார். பின்னர் நடந்தது என்ன? கவிஞர் வாக்காலேயே கேட்போம்.


'தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள்!
சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்!
சரியாத குழல்சரிய லானாள் போலும்!
தடவினாள் போலும் எனைத் தன்க ரத்தால்!
புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்!
புரியட்டும் என இருந்தேன்; எதிரில் ஓர்பெண்
பிரிவுக்கு; வருந்தினே னென்றாள் ஒகோ!
பேசுமிவள் மனைவிமற் றொருத்தி தென்றல்!’

கண்முன் காட்சித்திரையினை விரிக்கும் அழகுச் சித்திரம் இது!

இயற்கைக்கு அடுத்தபடியாகக் கவிஞர் காதலைப் பாடுகின்றார். காதலைப் பாடாத கவிஞர் இலர்; பக்தியினைப் பெருக்கும் பாசுரங்களிலும் கூட 'நாயகன் நாயகி பாவம்’ ஆன காதற்பாட்டுகள் மிகுதியாய் இருப்பதனை நந்தமிழில் காணலாம். காதல் கவிதையின் வற்றாத ஊற்றாகும் (Love is one of the perennial torrents of Poetry).

அழகின் சிறப்பில் 'அழகே கவிதை' எனக் கூறிய கவிஞர், 'எழுதாக் கவிதை'யில் காதலியின் அழகு, கள் வெறி செய்கிறது; விளைவு இதோ ஒர் அழகிய கவிதை:


'தண்ணிலவும் அவள்முகமோ! தாரகைகள் நகையோ!
தளிருடலைத் தொடும் உணர்வோ நன்மனஞ்சேர் குளிரும்,
விண்ணீலம் கார்குழலோ! காணும்எழி லெல்லாம்
மெல்லியின்வாய்க் கள்வெறியோ! அல்லிமலர்த் தேனின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/79&oldid=1461256" இலிருந்து மீள்விக்கப்பட்டது