பக்கம்:வாழையடி வாழை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவேந்தர் பாரதிதாசனார் 79


என்று உவமை வாயிலாகப் புலப்படுத்துகின்றார். அமுதிருந்தும் உண்ண இயலாது. இசைப்பாட்டிருந்தும் கேட்க இயலாது, பூத்திருந்தும் மலரைச் சூட இயலாது கிடக்கும் தலைவியின் துயரந்தான் என்னே! இதனை,

'பழத்தோட்டம் அங்கே தீராப்
பசிக்காரி இவ்விடத்தில்

என்று 'எதிர்பாராத முத்தத்'தில் தலைவி பூங்கோதையின் ஆற்றாமைக் கூற்றாேடு ஒப்பிட்டுக் காணலாம். மேலும், பெண்களே காதலில் முன்னணியில் நிற்பதாகக் கவிதையில் காணலாம். சான்றாகக் கவிஞர் அவர்களின் கவிதை புனையும் தனிப்போக்கினைப் பூங்கோதை தன் காதலன் பொன்முடிக்கு எழுதிய கடித்ததினாற் காண்க.

'காதல் பிறந்த கதை'யில், கவிமணி 'கண்ணும் கண்ணும் கலந்து பேசின பேச்சில் பிறந்தது காதலே’ என்பார். பாரதிதாசனார் கவிதையில், காதலி ஒருத்தி தன் காதல் அனுபவத்தினை,

'கொழிக்கும் ஆணழகன்! — அவன்
கொஞ்சிவந் தேஎனது
விழிக்குள் போய்ப்புகுந்தான் — நெஞ்ச
வீட்டில் உலாவுகின்றான்’

என்று குறிப்பிடுகின்றாள். 'விழிக்குள் புகுந்து நெஞ்ச வீட்டினுள் உலாவுகின்றான்'. எத்தனை நயம் இத்தொடரில்!

'காதலி ருவர்களும் — தம்
கருத்தொ ருமித்தபின்
வாதுகள் வம்புகள் ஏன்? — இதில்
மற்றவர்க் கென்னஉண்டு?
சூது நிறையுளமே — ஏ
துட்ட இருட்டறையே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/81&oldid=1461258" இலிருந்து மீள்விக்கப்பட்டது