பக்கம்:வாழையடி வாழை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

‘வாழையடி வாழை’


தோழி : இறக்கும் நேரம் என்று அவரிடம் சொன்னதற்கு, இங்கு மட்டும் நான் வாழும் நேரமா? நானும் இறக்கும் நேரந்தான் என்று எரிந்து வீழ்ந்தார்.’

இத்தகைய உரையாடலின் கருத்து நயம் நினையுந் தொறும் மகிழ்வூட்டுவதாகும்.

மேலும் ஆதிமந்தி சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தானின் அருமைத் திருமகளாய் இருப்பினும், தன் காதற்கொழுநனுக்குத் தானே சமையல் செய்யவும், எண்ணெய் தேய்க்கவும் விரும்புவதாகக் கூறும் கவிஞர், காதல் வாழ்வின் நுட்பத்தினையும் பெற்றியினையும் பாங்குறப் புலப்படுத்துகின்றர்.

"அத்தானுக்கு என்ன பிடிக்கும், மாமிக்கு எந்தக் கறி பிடிக்கும் என்பது எனக்கல்லவா தெரியும்? உணவு ஆக்கும் பொறுப்பைப் பணிப்பெண்களிடம் ஒப்படைக் கலாமா?"

"உங்கள் திருமேனி திண்டி எண்ணெய் இட்டு எழில் மார்பில் இரு கண்ணையிட்டுத் துய்மை செய்யும் இன்பப் பணியை நான் பணிப்பெண்ணுக்கோ கொடுக்க உடன்படுவேன்?"

திருமேனி தீண்டி எண்ணெய் இட்டு எழில் மார்பில் இருகண்ணை இட்டு'—என்ன' நயமான-அழகான தொடர்!

பெண்ணுரிமை பேசிய பெருங்கவிஞர் பாரதிதாசனார் பாட்டில் பாரதியாரும், உரைநடையில் 'திரு. வி. க.'வும பெண்ணின் பெருமை பேசினர். பாரதிதாசனார் அத்துறையில் பல பாடல்களைப் புனைந்துள்ளார். 'ஜான் மில்டன்’ என்ற மேல் நாட்டுக் கவிஞர், பெண்களை 'வலிமையற்ற படைப்புகள்'(women are the weaker vessels) என்று குறிப்பிட்டார். பாரதிதாசனார் பாடுகிறார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/86&oldid=1461263" இலிருந்து மீள்விக்கப்பட்டது