பக்கம்:வாழையடி வாழை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

‘வாழையடி வாழை’

கல்வியை உடைய பெண்கள் திருந்திய கழனி; அங்கே
நல்லறி வுடைய மக்கள் விளைவது நவில வோநான்!'

—குடும்ப விளக்கு:இரண்டாம் பகுதி


என்று கல்லாத பெண்ணைக் களர்நிலம் என்றும், கற்ற பெண்ணை விளைநிலம் என்றும் உவமை காட்டிப் பெண் கல்வியின் சிறப்பினை உணர்த்துகின்றார், தந்தை பெண்ணுக்குக் கூறுவதாக அமைந்துள்ள அழகான இசைப்பாடலில், இக்கருத்து இசையுற இனிமையுறக் கிளத்தப் படுகின்றது:

“தலைவாரிப் பூச்சூடி உன்னைப் — 'பாட
சாலைக்குப் போ’ என்று சொன்னாள்உன் அன்னை;
சிலைபோல ஏனங்கு நின்றாய் —நீ
சிந்தாத கண்ணீரை ஏன் சிந்துகின்றாய்?
விலைபோட்டு வாங்கவா முடியும்? கல்வி
வேளைதோ றும்கற்று வருவதால் படியும்!
மலைவாழை அல்லவோ கல்வி? —நீ
வாயார உண்ணுவாய் போஎன் புதல்வி!
படியாத பெண்ணாயிருந்தால்; —கேலி
பண்ணுவார் என்னை இவ் வூரார் தெரிந்தால்:
கடிகாரம் ஓடுமுன் ஒடு! —என்
கண்ணல்ல! அண்டைவீட்டுப்பெண்களோடு:
கடிதாய் இருக்குமிப் போது —கல்வி
கற்றிடக் கற்றிடத் தெரியுமப் போது:
கடல்சூழ்ந்த இத்தமிழ் நாடு —பெண்
கல்விபெண் கல்விஎன் கின்றதன் போடு!”

—இசையமுது 1, தந்தை பெண்ணுக்கு


தந்தை சொல் கேட்டுப் பெண்ணும் பிள்ளையும் பள்ளி நோக்கிச் செல்கின்றனர். பிள்ளைகள் பள்ளி செல்லும் காட்சியே தனி ஆனந்தக் காட்சி! தாய் 'எழுங்கள்’ என்றனர்; பிள்ளைகள் எழுந்தார்கள். சுவடியை ஒழுங்குற அடுக்கி உடையை அணிவித்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழையடி_வாழை.pdf/88&oldid=1461264" இலிருந்து மீள்விக்கப்பட்டது