பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 இந்தக் காட்சியை நன்ருகக் கவனித்துக் கொண்டேதான் இருந்தாள் ராஜேசுவரி. - இந்தச் சமயத்திலே பரம உத்தமனை, மகா புத்திசாலியான பாஸ்கரனின் உதவி கிடைத்தால் எத்தனே நல்லது' என்று எண்ண மிட்டது 'ராஜத்தின் உள்ளம். காரை நிறுத்தச் சொல்வி இறங் கிப் போப் அவனிடம் பேசலாமா? என்று எண்ணிள்ை. அதற் குள் ராஜேசுவரி வெடுக்கென்று, ' ஏன் இப்படி அவஸ்தைப் ப்டுகிருய்?' என்று கேட்டுவிட்டாள். ராஜத்தின் எண்ணம்ெல் லாம் பறந்தோடிவிட்டன. ஒன்றும் இல்லையே! என்ருள். ஒன்றும் இல்லேயாவது ? எல்லாவற்றையும் கான் பார்த் துக்கொண்டுதான் இருந்தேன். அவனே உனக்குத் தெரியுமா? யார் அவன்?' என்று கேட்டாள் ராஜேசுவரி. யாரைச் சொல்கிறீர்கள் ? யாரைப் பற்றிக் கேட்கிறிர்கள்?’ என்று ஒன்றும் அறியாத பரமார்த்தி போலக் கேட்டாள் ராஜம். :: உம்...இருக்கட்டும்!" என்று கறுவுகிற முறையிலே கிண்ட லாகக் கூறினுள் ராஜேசுவரி. இதற்குள் டாக்ளி தியேட்டரை அடைந்துவிட்டது. இவரும் இறங்கினர்கள். . கொட்டகையிலே எல்லோரும் தம்மை மறந்த கிலேயிலே படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனல் ராஜமும் ராஜேசு வரியும் எங்கிலேயிலே இருந்தார்கள்? : ராஜேசுவரியின் உள்ளத்திலே அனல் கலந்த ஆத்திரம். ராஜத்தின் மனத்திலே பயம் கலந்த போராட்டம். அவள் பயத் திற்கு ஏற்ப அங்கே, முன் வரிசையிலே...? வேறு யாருமில்லை; பூரீநிவாசன்தான். ராஜத்தின் மனம் என்னபாடுதான் படாது? 33. எரிமலை வெடித்தது! எந்த கடினத்தில் ரீநிவாசன் கம்மைப் பார்த்துவிடுவானே, அதிலிருந்து என்ன என்ன் விபரீதங்கள் நேர்ந்துவிடுமோ என்கிற அதியுடன் நெருப்புப் பாப்பின்மீது இருப்பவள் போலத் தவித்துக் கொண்டிருந்தாள் ராஜம். கூடுமானவரையில் தலையை நிமிரா டில் கீழ் நோக்காகவே அவனேக் கவனித்த வண்ணம்’ ஒவ்வொரு விகாடியையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்துக்கொண்டிருந்தாள். அதுமட்டும் ப்ோதுமா? அவள் தன் முகத்தை வேண்டுமானல் மறைத்துக் கொள்ள முடியுமே தவிரப் பக்கத்திலே உட்கார்க் திருக்கிற ராஜேசுவரியை அவளால் எப்படி மறைத்து வைக்க முடியும்? அவனுக்கோ அவளைத் தெரியும். ஆம், அவள் விலாசம் அவன் சொல்லித்தானே ராஜத்திற்குத் தெரியும்? மேலும் அன்று காலையில் வேறு அவளைத் தேடிக்கொண்டு வந்திருந்தானே?