பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ஆரம்பம் ஆகி இருந்தது கடிதம் கிருஷ்ணராஜபுரம், பூரீநிவா சின், சுந்தரேசன், பாஸ்கரன்-முதலிய பெயர்களும் குடும்ப விஷயங்களும் உள்ளே கிாம்பி இருந்தன. வேறென்ன வேண்டும்? - கிராதகி எப்படிக் கூசாமல் பொய் சொல்லுகிருள் இருக் கட்டும். இன்று துணிச்சலுடன் பேசி விஷயத்தை அம்பலப் படுத்தியே திருவது - என்று அவள் முடிவு கட்டினபோது rாஐேசுவரி வந்துவிட்டாள் ! எல்லே சுற்றி வந்த பிடாரி என்பார்களே, அப்படி இருந்தது ராஜேசுவரியின் தோற்றம். காாைவிட்டு இறங்கினவள் வேகமாக கடந்து உள்ளே வந்தாள். கையில் இருந்த தோல் பையை மேஜை மேல் வீசி எறிந்தாள். டக்கென்று சோபாவில் அமர்ந்தாள். படபடப்பு அடங்கவில்லை. அது அடங்கும் வரையில் அவளுக்குப் பொறுமை இல்லை. ஏய் ' என்று குரல் கொடுத்தாள். - அந்தக் குரலில் அதிகாரம், அலட்சியம், ஆத்திரம் எல்லாம் கலந்திருந்தன. யாரை அப்படிக் கடப்பிடுகிருள் என்று முதலில் ராஜத்திற்குப் புரியவில்ல்ே. தெருக்கதவு தாளிட்டிருக்கிறது. வீட்டினுள் இருவர் தவிர யாரும் இல்லே. அங் கிலேயில் ராஜேசுவரி யாரைத்தான் அவ்வாறு கூப்பிட்டிருக்க முடியும்? தன்னைத் தான்ே என்று ராஜம் சிக்கிப்பதற்குள் மறுபடியும் அவள், ஏய்! ராஜம்' என்று கூவினுள், எரிமலை வெடித்தாற்போன்று இருந் தன அவள் தோற்றமும் செயலும். " . . . . . 34. மறுபடியும் நடுத் தெருவில் ரா.ஜ.மா...?.. . . . . . அவளே யோசிக்க விடவில்லே ராஜேசுவரி. வேதம் என்கிற ராஜம்மாள் அவர்களே! புரீமதி ராஜம் சமணி அவர்களே! சற்று இப்படி வாருங்கள்” என்று அழுத்தக் கிருத்தமாகக் கூப்பிட் டாள். ராஜத்திற்கு விஷயம் விளங்கி விட்டது. ராஜேசுவரி பூரீநிவாசன் மூலமோ, வேறு எந்த வகையிலோ தன்னைப்பற்றித் தெரிந்து கொண்டு விட்டாள் என்று தீர்மானம் செய்து கொண் டாள். துணிந்து அவளிடம் ரமணியைப் பற்றி அன்று விசாரித்து விடவேண்டும் என்று அவள் முடிவுகட்டி இன்னும் சில கிமிடிங் கள்கூட ஆகவில்லை. அதற்குள் ராஜேசுவரியே...... ராஜம் தயங்கி யோசித்துக் கொண்டிருப்பதற்குள் ராஜேசு வரி ஆத்திரத்துடன் கூடத்திற்கே வந்துவிட்டாள். பற்களை கறநற வென்று கடித்தவண்ணம் ராஜத்தை எரித்துவிடுபவள் போல்