பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 சிக்குண்டு தலவிரிகோலமாக நின்று அடி, உதை முதலியவை களிேயும் லட்சியம் செய்யாமல் தன் கற்பைக் காத்துக்கொள்ளப் போராடுவது போன்ற ஒரு தோற்றம் அவன் மனக்கண் எதிரே தென்பட்டது தேள் கொட்டினவன் போல காற்காலியை விட்டு எழுந்தான். 'சீ' என்ன நம் மடமை. எப்பேர்ப்பட்ட சந்தர்ப்பம் இது? இந்த கிலேயிலே நாம் இங்கே வந்து விக்ராந்தியாக உட் கார்ந்துகொண்டிருக்கிருேமே!’ என்று தன்னைத்தானே கடிந்து கொண்டான். பரபரப்புடன் அறையை விட்டுக் கிளம்பின்ை. அப்போது அறைக்கதவுப் பக்கமாகச் சுவரிலே பொருத்தியிருந்த கோட் ஸ்டாண்டில் தொங்கிக்கொண்டிருந்த பூரீகிவாசனின் சட்டை மேலே உரசிற்று. அதன் பையில் இருந்த கடிதம் கண்ணில் பட்டது. அதை எடுத்துப் பார்ப்பது முறை அல்ல, எடுத்துப் பார்ப்பதால் ஒரு பயனும் ஏற்படது என்றெல்லாம் மனசிலே தோன்றியும் கை தானகவே சென்று அதை எடுத்தது. அசட்டையாக அதை நோக்கிய அவன் கண்கள் ஆணத்திலே ஆச்சரியத்தால் அகல விரிந்தன. உடனே உள்ளமும் உடலும் உணர்ச்சி வசமாகித் துடிதுடிக்கக் கடிதத்தை ஊன்றிப் படிக்க லானல், 19,பகவன்தாஸ் ரோடு, 32-8 19-س,..... பம்பாய் அன்புள்ள நண்பன் பூரீநிவாசனுக்கு : நீ அனுப்பிய பனமும், உன் இரண்டாவது கடிதமும் வந்து சேர்ந்தன. நான் இந்த ஊரை விட்டுப் போகப் போகிறேன் என்று எழுதிய பிறகும் நீ பிடிவாதமாக இங்கே வரப் போவதாக எழுதியதை உத்தேசித்து உனக்கு அறை ஏற்பாடு செய்துவிட் டேன். பணமும் கொடுத்து விட்டேன். அறையின் விலாசமும், சாவி பெற்றுக் கொள்ள வேண்டிய விலாசமும் இத்துடன் தனிக் காகிதத்தில் டைப் செய்து வைத்திருக்கிறேன். ஆல்ை ஒரு வகையிலே நீ அதிருஷ்டசாலிதான். இன்று இந்த ஊரிலே ஒரு சரண் இடம் கிடைப்பது மகா துர்லபமாக இருக்கிறது. மாதக் கனக்கிலும் வருஷக் கணக்கிலும் முயன்று கொண்டிருப்பவர் களுக் கெல்லாம் இன்னும் இடம் கிடைத்த பாடு இல்லே. உனக் கும் அறை கிடைத்திராதுதான். காக்கை உட்காாவும் பனம் பழம் விழவும் சந்தர்ப்பம் ஒத்துக்கொள்வது போல நீ இங்கே வா வேண்டும் என்று எழுதினதற்கும், நான் மாற்றலாகி வெளியூர் செல்ல சேர்ந்ததற்கும் மிகவும் பொருத்தமாக இருந்ததால் உட னடியாக உனக்கு இடம் கிடைக்கும் பாக்கியும் ஏற்பட்டுவிட்டது. ஆம், என் அறையையேதான் உனக்கு ஏற்பாடு செய்துவிட்டுப் போகிறேன். கான் வீட்டுக்காரரிடமிருந்து பெறவேண்டிய அட்