பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 கடிதத்தை மடித்துச் சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான் பாஸ்கரன். வந்தது ருக்மிணிதான், "இங்கேயா இருக்கிறீர்கள்? காளுேமே என்று பார்த்தேன். வந்தவர்களுக்குப் பதில் சொல்லி அனுப்ப இத்தனே நாழிகை ஆ விட்டது. இதோ ஒரு நொடியிலே குளித்து விட்டுச் சமையல் செய்து விடுகிறேன்..... ** * . 命 அவள் பேச்சைக் கேட்டு அவன் மனம் அங்கலாய்த்தது. 'இந்த நாளில் இப்படியும் ஒரு பெண்மணி இருக்கிருளே! என்று எண்ணிற்று. ஒரு மாதிரியான சிரிப்புடன் கேட்டான்: 'சமைப்பதும் சாப்பிடுவதும் இருக்கட்டும் மன்னி ; அதுதான் எப்பொழுதும் இருக்கிறதே. முதலில் அண்ணு எங்கே போயிருக் கிருர் எகறு தெரிந்து கொண்டாயா ?” "அதை எப்படித் தெரிந்துகொள்ள முடியும் ?” "அண்ணுவே வந்து சொன்னல்தான் உண்டு என்கிருயா? அவள் கிஷ்களங்கமான உள்ளத்தோடு சிரித்தாள். அதைக் கண்டு அவனும் சிரித்து வைத்தான். -

அக்கம் பக்கம் உள்ளவர்களை விசாரித்திருப்பாயே ?” விசாரிக்காமலா இருப்பேன் ?”

என்ன சொன்னர்கள் ?” 拿 இரண்டு நாள் முன்பு அடுத்த வீட்டுக்காரர்களிடம் ஆபீஸ் அலுவலாக இரண்டு நாளில் வெளியூர் போகும்படி இருக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தாராம்.” - ஆபீஸ் காரியமாகவா, மருமாளின் முளைக் கோளாறுக்கு வைத்தியம் செய்யவா ? என்று மனசோடு கேட்டுக்கொண்டான் அவன். பிறகு, அநாவசியமாக ஒரு பாவமும் அறியாத இந்தப் பேதையோடு பேசிக்கொண்டிருந்து நேரத்தை வீணுக்குவதில் பயன் என்ன?’ என்று எண்ணிக் கொண்டான். " சரி. எனக்குக் கொஞ்சம் அவசர ஜோலி இருக்கிறது. அப்புறம் சாவகாசமாக வருகிறேன்" என்று கிளம்பின்ை. -

  • ஒரு பிடி சாப்பிட்டுவிட்டுப் பொகலாமே!" என்ருள் அவள். " எனக்கு என்ன, உபசாரமா ? ஆகட்டும், அப்புறம் வரு கிறேன்' என்று வேகமாக நடந்தான் அவன்.

மேலே என்ன செய்வது? சமீபகாலமாக அடிக்கடி அவன் உள்ளத்திலே இந்தக் கேள். விக்கு அவசியம் ஏற்பட்டுக்கொண்டே இருப்பதை எண்ணினதும் அவனிடமிருந்து ஆயாசம் கலந்த ஒரு பெருமூச்சு வெளி வந்தது.